Samantha: தமிழ், தெலுங்கு ஆகிய மொழி படங்களில் நடித்து வரும் நடிகைதான் சமந்தா. மாஸ்கோவின் காவேரி என்கிற படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார். அதன்பின் சில படங்களில் நடித்தார். அப்படியே தெலுங்கு சினிமா பக்கம் சென்று அங்கும் நடிக்க துவங்கினார்.

ஒரே நேரத்தில் இரண்டு மொழி படங்களிலும் நடித்து இரண்டு மார்க்கெட்டையும் பிடித்தார். விஜயுடன் கத்தி, மெர்சல், தெறி ஆகிய படங்களில் நடித்தார். மேலும், சூர்யா, விஷால், தனுஷ் என பலருடனும் நடித்தார். தெலுங்கு படங்களில் நடிக்கும்போது நாக சைத்தன்யாவை காதலித்து அது திருமணத்திலும் முடிந்தது.

ஆனால், சில வருடங்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்தில் முடிந்தது. ஊடகங்களில் அதிகமாக விவாதிக்கப்படட விஷயமாக அவர்களின் விவாகரத்து இருந்தது. சமந்தா மீது பலரும் சேற்றை வாரி இறைத்தார்கள். ஆனால், புன்னகையுடன் எல்லாவற்றையும் கடந்து போனார் சமந்தா.

ஒருபக்கம் தோல் நோயாலும் பாதிக்கப்பட்டு பல நாட்கள் படுக்கையிலும் இருந்தார். வெளிநாடுகளுக்கு சென்று சிகிச்சையெல்லாம் எடுத்து வருகிறார். ஒருபக்கம் சினிமாவிலும் நடித்து வருகிறார்.

அவ்வப்போது ரசிகர்களை கிறங்க வைக்கும்படி கவர்ச்சி உடைகளில் அழகை காட்டி புகைப்படங்களை ஷேர் செய்து ரசிகர்களை உசுப்பேத்தி வருகிறார். அந்தவகையில், சமந்தா வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறார். சமீபத்தில் மலேசியா சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இது.

