அஜித்தை சீண்டவே முடியாது.. விஜயகாந்த் பார்த்து ரசித்த ஆளு அஜித்! பிரபலம் சொன்ன புது தகவல்

Published on: February 19, 2024
ajith
---Advertisement---

Actor Ajith: இணையத்தை திறந்து பார்த்தாலே நாள்தோறும் அஜித் பற்றிய செய்திகள்தான் ஆக்கிரமித்து வருகின்றன. கடந்த ஒன்றரை மாதகாலமாக அஜித்தை பற்றிய நெகட்டிவ் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் இது நாள் வரைக்கும் அஜித் அதற்கெல்லாம் செவி சாய்க்கவே இல்லை.

இந்த நிலையில் பிரபல மூத்த பத்திரிக்கையாளரான அமலான் சமீபத்தில் அஜித் எப்படிப்பட்டவர்? ஏன் இந்தளவு விமர்சனத்திற்கு ஆளாகுகிறார் என்பதற்கான கேள்விகளுக்கு விடையளித்திருக்கிறார். அஜித்தை பொறுத்தவரைக்கும் ஒரு ஈகோ பிடித்த நபர்தானாம். ஆனால் விஜயகாந்த் இறப்பிற்கு ஏன் வரவில்லை என்று கேட்டால் வந்தால்தான் விஜயகாந்த் ஆன்மா சாந்தியடையுமா? என்ற பதில் கேள்வியையும் கேட்டிருக்கிறார் பத்திரிக்கையாளர் அமலான்.

இதையும் படிங்க: டெரர் லுக்கில் சும்மா மிரட்டுறாரே தனுஷ்!.. அதிர வைக்கும் ராயன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!..

அதுமட்டுமில்லாமல் இத்தனை பேர் சொல்லி நாம் கேட்பதா என்ற மன நிலையில் கூட அஜித் போகாமல் இருந்திருக்கலாம் என்றும் அந்த பத்திரிக்கையாளர் கூறினார். மேலும் நான் கடவுள் சமயத்தில் விஜயகாந்த் அஜித்துக்கு உதவ வில்லை. அதன் காரணமாகத்தான் அஜித் வரவில்லை என்றெல்லாம் வதந்திகள் பரவி வரும் நிலையில் அந்த செய்தி எல்லாம் முற்றிலும் பொய் என்று பத்திரிக்கையாளர் அமலான் கூறினார்.

சொல்லப்போனால் நடிகர் சங்க கடனுக்காக ஏன் அடுத்தவர்களிடம் கை நீட்ட வேண்டும். நாம் ஒவ்வொருவரும் சில குறிப்பிட்ட தொகையை போட்டு கடனை அடைக்கலாம் என அசால்ட்டாக 10 லட்சத்தை கொடுத்து கிளம்பினார் அஜித். இந்த ஒரு விஷயம் விஜயகாந்தை மிகவும் கவர்ந்ததாம். உடனே விஜயகாந்த் தன் அருகில் இருந்த பொருளாளர் காளை என்பவரிடம் ‘என்னை மாதிரியே இருக்காருப்பா’ என அஜித்தை பற்றி வியந்து கூறினாராம் விஜயகாந்த்.

இதையும் படிங்க: மணிய போட்டு மறச்சாலும் மானம் போகுது!.. தூக்கலான கிளாமரில் அதிர வைக்கும் ஜான்வி கபூர்…

அதனால் அஜித்துக்கும் விஜயகாந்துக்கும் எந்த மனக்கசப்பும் இல்லை. ஆனால் ஒரு எட்டு வந்து பார்த்திருக்கலாம். இல்லாவிடில் அவர் சமாதிக்கு கூட போய் அஞ்சலி செலுத்தியிருக்கலாம் என்று பத்திரிக்கையாளர் அமலான் கூறினார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.