Connect with us

Cinema News

ஐஸ்வர்யாவுக்கு பண்ண மாதிரி பண்ணிடாதீங்க பாய்!.. தனுஷுக்கு பார்த்து பண்ணுங்க!.. கெஞ்சும் ஃபேன்ஸ்!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த பிப்ரவரி 9ம் தேதி லால் சலாம் திரைப்படம் வெளியானது. 10 நாட்கள் ஆன நிலையில், அந்த படத்தின் மொத்த வசூலே 16 கோடி அளவில் தான் உள்ளதாக கூறுகின்றனர்.

விஷ்ணு விஷாலுக்கு 6 கோடி ரூபாய் சம்பளமும், விக்ராந்துக்கு 70 லட்சம் ரூபாய் சம்பளமும் ரஜினிகாந்துக்கு 40 கோடி சம்பளமும், ஏ.ஆர். ரஹ்மானுக்கு 3 கோடி ரூபாய் சம்பளமும் கொடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க: பிரியாமணியை பார்த்து ஃப்ரீயா வருவீங்களா?.. இல்லை காசுக்கு வருவீங்களான்னு கேட்ட தொகுப்பாளர்?…

ஆனால், அந்த படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய தோல்வியை சந்தித்து இருப்பதாக கூறுகின்றனர். மேலும், படத்தில் எந்தவொரு பாடலும் பெரிதாக ரசிகர்களை கவரவில்லை என்றும் ரஜினிகாந்துக்கு போடப்பட்ட “ஜலாலி” பாடல் கூட ஹுகும், காவாலா அளவுக்கு ஹிட் அடிக்கவில்லை என்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

இந்த ஆண்டு வெளியான அயலான் மற்றும் லால் சலாம் படங்களுக்கு ஏ.ஆர். ரஹ்மான் தான் இசை. ஆனால், இரண்டு படங்களிலும் பாடல்கள் பெரிதாக எடுபடவில்லை. இந்நிலையில், அடுத்து தனுஷின் இயக்கத்தில் அவர் நடித்து வரும் ராயன் படத்திற்கும் ஏ.ஆர். ரஹ்மான் தான் இசை என்பதை அறிந்த ரசிகர்கள் சற்றே அஞ்ச ஆரம்பித்து விட்டனர்.

இதையும் படிங்க: பிதாமகனை பட்டி டிக்கெரிங் செய்த பாலா!.. வணங்கான் டீசர் ரிலீஸ்.. அருண் விஜய் நடிப்பு எப்படி?

ஆனால், தனுஷின் மரியான், ராஞ்சனா மற்றும் அட்ரங்கி ரே படங்களுக்கு ஏ.ஆர். ரஹ்மான் தான் இசையமைப்பாளர். அந்த 3 படங்களின் ஆல்பங்களும் சூப்பர் ஹிட் அடித்துள்ளன. இந்நிலையில், 4வது முறையாக தனுஷ் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் இணையும் இந்த காம்போ கண்டிப்பா ஹிட் கொடுக்கும் என்று ரசிகர்கள் நம்பி வருகின்றனர்.

 

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top