Cinema History
காட்ஃபாதர் ஸ்டைலில் சிவாஜி நடிக்கவிருந்த படம்!.. கடைசி நேரத்தில் எஸ்கேப் ஆன கமல்!..
Godfather: உலகமெங்கும் உள்ள சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட திரைப்படம் காட் ஃபாதர். நாவலை அடிப்படையாக கொண்டு உருவான இந்த படத்தின் முதல் பாகம் 1972ம் வருடம் வெளியானது. இதில் மார்லன் பிராண்டோ முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அவரின் மகனாக ஆல் பேசினோ நடித்திருந்தார்.
டான்களுக்கு இடையே நடக்கும் சண்டைகளை அடிப்படையாக வைத்து இந்த படம் உருவாகி இருந்தது. அப்பா இறந்தபின் அவரின் மகன் டானாக மாற என்ன நடக்கிறது என்பதுதான் காட் ஃபாதர் படத்தின் கதை. இப்படத்தின் இரண்டாம் பாதி 1972ம் வருடமும், 3ம் பாகம் 1990ம் வருடமும் வெளியானது. மேலும், 4ம் பாகம் 2020ம் வருடம் வெளியானது.
இதையும் படிங்க: டெரர் லுக்கில் சும்மா மிரட்டுறாரே தனுஷ்!.. அதிர வைக்கும் ராயன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!..
இந்த படத்தின் கதையை வைத்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் பல படங்கள் உருவானது. இப்போதும் இப்படத்தின் பாதிப்பில் இயக்குனர்கள் படங்களை இயக்கியே வருகின்றனர். கமல்ஹாசன் கூட இந்த கதையை அடிப்படையாக வைத்தே தேவர் மகன் கதையை எடுத்திருந்தார்.
காட்ஃபாதர் கதையின் அடிநாதம் தேவர் மகன் கதையோடு அப்படியே பொருந்திபோகும். பல இயக்குனர்களும் தங்களின் ஸ்டைலில் காட்ஃபாதர் படக்கதையை உல்ட்டா செய்து எடுத்தார்கள். இந்த படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்ற போது தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் தயாரிக்க நடிகர் திலகம் சிவாஜியும், கமல்ஹாசனும் இணைந்து காட்ஃபாதர் ஸ்டைலில் ஒரு படத்தை எடுக்க திட்டமிட்டனர்.
ஆனால், பாலச்சந்தரின் வலது கை போல இருந்த அனந்து கமலிடம் ‘இந்த படத்தில் சிவாஜியின் வேடம்தான் பிரதானம். உனது கேரக்டர் டம்மி. எனவே இப்படத்தில் நடிக்காதே’ என சொல்ல இதில் நடிக்க கமல் ஆர்வம் காட்டவில்லை. எனவே, அந்த படம் டேக் ஆப் ஆகவில்லை. அதேநேரம், இப்படத்தின் சாயலில் மணிரத்னம் இயக்கிய நாயகன் படத்தில் கமல் நடித்திருந்தார்.
இந்த படத்தையும் முக்தா சீனிவாசன்தான் தயாரித்தார். சிவாஜி – கமலை வைத்து அவர் எடுக்க நினைத்த படம் மணிரத்னம் – கமலுக்குதான் சாத்தியமானது. இப்போது வரை சிறந்த இந்திய படங்களின் வரிசையில் நாயகன் படம் இருப்பது குறிப்பிடத்தக்கது.