Cinema News
எம்.எஸ்.வி மீது கோபப்பட்டு மரத்தடியில் போய் நின்ற இயக்குனர்!.. உருவானதோ ஒரு சூப்பர் பாட்டு!..
50,60களில் தமிழ் சினிமாவின் முக்கிய இசையமைப்பாளராக இருந்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். மிகவும் அடிமட்டத்திலிருந்து மேலே வந்தவர் என்பதால் ஈகோ என்பது எப்போதும் இவரிடம் இருக்காது. இயக்குனர்களிடமும், பாடலாசிரியர்களிடமும், பாடகர்களிடமும் மிகவும் கணிவாக நடந்து கொள்வார்.
சினிமாவுக்கு வருவதற்கு முன் ஒரு திரையரங்கில் திண்பண்டங்களை விற்கும் வேலையெல்லாம் இவர் செய்திருக்கிறார். தியேட்டரில் வேலை செய்யும்போதே இசையில் ஆர்வம் ஏற்பட்டது. அதன்பின் 40களில் பிரபல இசையமைப்பாளராக இருந்த எஸ்.எம்.சுப்பையா நாயுடுவிடம் வேலைக்கு சேர்ந்து சினிமா இசையை கற்றுக்கொண்டார். ஒரு கட்டத்தில் தானே இசையமைப்பாளராகவும் மாறினார்.
இதையும் படிங்க: அந்த பாட்டை நான் பாட மாட்டேன்!.. எம்.எஸ்.வியிடம் கறாராக சொன்ன டி.எம்.எஸ்!… காரணம் இதுதான்!..
60களில் முன்னணி இயக்குனராக இருந்தவர் ஸ்ரீதர். பல புதிய நடிகர், நடிகைகளை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். ஜெயலலிதாவை அறிமுகம் செய்தவரும் இவர்தான். இவர் சிவாஜி, கே.ஆர்.விஜயா ஆகியோரை வைத்து உருவாக்கிய திரைப்படம்தான் ஊட்டி வரை உறவு.
இந்த படத்தில் ஒரு வெஸ்டர்ன் கலந்த ஒரு மெலடி பாடல் வேண்டும் என ஸ்ரீதர் விரும்பினார். ஆனால், எம்.எஸ்.வி போட்ட டியூன்களில் ஸ்ரீதருக்கு திருப்தி இல்லை. கடைசியாக ஒரு டியூனை போட்ட எம்.எஸ்.வி இது சரியாக இருக்கும். முழுப்பாடலையும் ரிக்கார்ட் செய்து உங்களுக்கு கொடுக்கிறேன். கேட்டுப்பாருங்கள் உங்களுக்கு பிடிக்கும் என சொல்லி இருக்கிறார்.
இதையும் படிங்க: எம்.எஸ்.வி பாடலை பாட முடியாமல் அழுத பெண்.. பின்னளில் பிரபல பின்னணி பாடகி.. அட அவரா?!..
எல்லாம் தயார் செய்துவிட்டு பார்த்தால் ஸ்ரீதர் அங்கே இல்லை. வெளியே வந்து எம்.எஸ்.வி பார்த்தபோது ஸ்ரீதர் ஒரு மரத்தடியின் கீழ் நின்று கொண்டிருந்தார். ‘இங்கே வந்து ஏன் நிற்கிறீர்கள்?’ என எம்.எஸ்.வி கேட்க ‘நான் சொன்ன சொன்னாலும் உங்களுக்கு புரியவில்லை. எனக்கு வேகமான பாடல் வேண்டும். உங்கள் டியூன் மெதுவாக செல்கிறது’ என ஸ்ரீதர் சொல்லி இருக்கிறார்.
அவ்வளவுதானே.. உள்ளே வாருங்கள். போட்டு தருகிறேன் என சொல்லி அழைத்து சென்ற எம்.எஸ்.வி போட்ட பாடல்தான் ‘தேடினேன் வந்தது.. நாடினேன் தந்தது’ பாடல்.. இந்த பாடல் ரசிகர்களை மிகவும் கவர்ந்து ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அலட்சியம் செய்த எம்.எஸ்.வியை கதறி அழ வைத்த பட்டுக்கோட்டையார்… இப்படி எல்லாம் நடந்துருக்கா?