Cinema History
உற்சாகத்தில் இளையராஜா போட்ட மெட்டு…. இன்று வரை அதை முறியடிக்க பாடலே இல்லை…!
இளையராஜாவைப் பற்றி கவிஞர் அறிவுமதி ஒரு முறை இப்படி சொன்னார். அவரோட இசையே முக்கால்வாசி உணர்வுகளைக் கொடுத்து விடும். பிறகு வரிகள் என்பது அதற்கு உதவி பண்ணக்கூடியதாக இருக்கும். அதற்கு உதாரணம் தான் இந்தப் பாடல். சினோரீட்டா ஐ லவ் யூ… பாடல் இடம்பெற்ற படம் ஜானி.
பாடலை எழுதியவர் கங்கை அமரன். பாடியவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். ரஜினி, ஸ்ரீதேவி நடித்த படம். படத்தில் எல்லா பாடல்களுமே சூப்பர்ஹிட். இந்தப் பாடலில் வரும் சினோரீட்டா என்பது ஸ்பானிஷ் மொழி. திருமணமாகாத பெண்ணை செல்வி என்பர். அதே போல ஸ்பானிஷ் மொழியில் சினோரீட்டா.
அந்தக்கால கட்டத்தில் ஆழியாறு அணைக்கட்டில் மெட்டமைக்கப் போவாங்களாம். அப்படிப் போகும்போது படத்தோட இயக்குனர் உதிரிப்பூக்கள் மகேந்திரன், தயாரிப்பாளர் கேஆர்ஜி எல்லாரும் போனாங்க. அப்போது செல்போன் கிடையாது. அவரு வீட்டுல இருந்து அழைப்பு வந்துருக்கு. அதாவது அவருக்கு 2வது பையன் பொறந்துருக்காருன்னு சேதி வந்ததாம். அதுதான் யுவன். அப்போ உற்சாகத்துல இளையராஜா போட்ட மெட்டு தான் இது.
இதை அவர் பல மேடைகளிலும் சொல்லியிருக்கிறார். வித்யாசாகர் என்ற பெயரில் சலூன்கடைக்காரராக ரஜினி வருவார். முதலில் கத்திரிக்கோல் இசையைக் கொடுத்திருப்பார் இளையராஜா. அப்போதே கார் கிளம்பும்போது வயலின், புல்லாங்குழல் இசை எல்லாம் வேற லெவலில் வரும். இசை முழுவதும் ஒரு புத்துணர்வைத் தரக்கூடியதாக இருக்கும். பூனை, தவளை எல்லாம் இழுத்துக் கத்துவதைப் போல எல்லாம் மியூசிக் போட்டு அசத்தியிருப்பார் இளையராஜா.
ராகங்கள் பாடுகின்ற நாத வெள்ளங்கள், நாளெங்கும் காணுகின்ற பாவை வண்ணங்கள் என பாடும்போது வயலின் மியூசிக் நம்மை வேறொரு உலகிற்கு அழைத்துச் செல்லும்.
ஆனந்தம் ஒன்றல்ல, ஆரம்பம் இன்றல்ல… எங்கெங்கோ செல்லுதே, என் நெஞ்சு கிள்ளுதே என்று பாடலில் முதல் சரணம் வரும். அதே போல 2வது சரணத்தில் பூ மெத்தை போடுகின்ற வாச புஷ்பங்கள், பொன் தட்டில் ஆடுகின்ற பூவை எண்ணங்கள்னு செம சூப்பராக கங்கை அமரன் எழுதி முடித்திருப்பார். பாடலின் இடையிடையே எஸ்பிபி செய்த ரொமான்டிக் சேட்டைகள் நம்மை ரொம்பவே ரசிக்க வைக்கும். பாடலின் ஓபனிங் மியூசிக்கிலேயே நாம் மனதைப் பறிகொடுத்துவிடுவோம். இனி இப்படி ஒரு பாட்டு நீங்க தேடிப்பார்த்தாலும் கிடைக்காது.
மேற்கண்ட தகவலை பிரபல யூடியூபரும், திரை ஆய்வாளருமான ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.