அந்த விஷயத்துக்காக இரவில் சுவரேறி குதித்த சிவாஜி… பிரபல நடிகர் சொல்லும் சீக்ரெட்…

Published on: February 21, 2024
Sivaji
---Advertisement---

சிவாஜி படத்தில் சிறுவயது வேடத்தில் நடிக்க ஆசைப்பட்டு அது நடக்காமல் போன சம்பவத்தை நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் இவ்வாறு சொல்கிறார். சிவாஜி நடித்த படத்தில் ஆங்கிலப் பட சாயல் ஒன்றையும் ஒய்.ஜி.மகேந்திரன் குறிப்பிடுகிறார்.

ஏ.பீம்சிங் இயக்கத்தில் நடித்த படம் பார் மகளே பார். இந்தப் படத்திற்கு சிறுவயது வேடத்தில் ஹீரோவுக்கு பதிலாக நான் தான் நடிப்பதாக இருந்தது. சிவாஜியே எனக்காக என் தந்தையிடம் இதை சிபாரிசு செய்தார். இதைக் கேட்டதுமே எனக்கு அப்படி ஒரு சந்தோஷம். அப்போது எனக்கு 11 வயது. நான் டான்போஸ்கோ பள்ளியில் படித்துக் கொண்டு இருந்தேன். தினம் போறவன், வர்றவன்கிட்ட எல்லாம் ஐயோ நான் சிவாஜியோட புள்ளையா நடிக்கப் போறேன்னு சொல்வேன்.

ஆனா என்னமோ தெரியல. எனக்கு அந்தக் கொடுப்பினை இல்லாமப் போயிடுச்சு. அந்தக் கதையைக் கொஞ்சம் மாத்திட்டாங்க. அதுக்குப் பதிலா 2 பெண்களா போட்டுட்டாங்க என தனது ஆதங்கத்தைத் தெரிவித்தார் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன். நான் அப்போ கூட சொன்னேன். பெண் வேஷம் போட்டு நடிக்கிறேன்னு… ஆனா அதுக்கு அவர் ஒத்துக்கல. இருக்குடா… இன்னொரு நாள் நீ நடிப்பேடான்னு சொல்லிட்டாரு.

Annaiyin Aanai, Paritchaiku Neramachu
Annaiyin Aanai, Paritchaiku Neramachu

சிவாஜி மேல அன்னைக்கு எனக்கு ஆரம்பிச்ச மோகம், அதைக் காதல்னு கூட சொல்லலாம். அன்னையின் ஆணை படத்துல சாவித்திரி அவரிடம் கோபப்பட்டு பேசும்போது நகத்தை வைத்து அவரது முதுகில் கீறி விடுவார்.

அப்போது துண்டை எடுத்து சிவாஜி தண்ணீரில் நனைத்தபடி முதுகைத் துடைத்து விட்டு அதை அப்படியே பிழிவார். அப்படி பிழிவதைப் போல துண்டை முறுக்கியபடி பளார்னு ஒரு அறை விடுவார் சாவித்திரிக்கு. அது அப்படியே இங்கிலீஷ் படம் பார்த்த மாதிரி இருக்கும். ஒரு தடவை பரீட்சைக்கு நேரமாச்சு படத்தின்போது எங்க வீட்டுக்கு புளியோதரை சாப்பிட வந்தார். அப்போது அதெப்படி இங்கிலீஷ் படத்துல பார்த்த மாதிரியே நடிச்சிருந்தீங்களேன்னு கேட்டாங்க.

அதுக்கு அது இங்கிலீஷ் படத்துல இருந்து காபி அடிச்சது தான் என்றார். விகேஆர் அடிக்கடி எங்கிட்ட சொல்வாரு. நாங்க ராத்திரி திருட்டுத்தனமா சுவரேறி குதிச்சி வேற காரணங்களுக்காக வெளியே போவோம். ஆனா இவரு சுவரேறி குதிச்சி இங்கிலீஷ் படம் பார்க்க வெளியே போவார். அப்படி அவரு பார்த்த படத்துல ஜேம்ஸ் கேட்னி என்ற ஒரு வில்லன் நடிகர். அவர் ஒரு படத்துல இப்படி பண்ணிருக்காரு.

அதைத் தான் நான் செஞ்சேன்னு சொன்னார் சிவாஜி. இங்கிலீஷ் படத்துல இருந்தும் நடிப்பைக் கிரகித்துக் கொள்பவர் தான் நடிகர் திலகம். இவ்வாறு ஒய்.ஜி.மகேந்திரன் தெரிவித்துள்ளார். 1982ல் வெளியான பரீட்சைக்கு நேரமாச்சு படத்தில் சிவாஜியுடன் இணைந்து ஒய்.ஜி.மகேந்திரன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.