நான்தான் அதுல பெஸ்ட்டுன்னு நினைச்சேன்!. ஆனா விஜயகாந்த் அசத்திட்டாரு!.. ராதா என்ன சொல்றார் பாருங்க!…

Published on: February 22, 2024
radha
---Advertisement---

கேரளாவிலிருந்து தமிழ் சினிமாவுக்கு வந்த பல நடிகைகளில் நடிகை ராதாவும் ஒருவர். பாரதிராஜா இயக்கிய அலைகள் ஓய்வதில்லை படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர். ‘இவ்வளவு நடிப்பை இத்தனை நாள் எங்கே வைத்திருந்தாய்?’ என பாரதிராஜாவின் பாராட்டை பெற்றவர் இவர்.

அலைகள் ஓய்வதில்லை மட்டுமில்லாமல் பாரதிராஜா இயக்கிய டிக் டிக் டிக், காதல் ஓவியம், முதல் மரியாதை போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் இவர். முதல் மரியாதை படத்தில் அவர் காட்டி நடிப்பை உச்சம் என்றே சொல்லாம். அந்த படத்தில் சொந்த குரலில் பேசாத ஒரே காரணத்தால் தேசிய விருதை இழந்தார்.

இதையும் படிங்க: ரஜினியை பதறவிட்ட கேப்டன் விஜயகாந்த்!.. பாத்ததும் பயந்துட்டாரு!.. நடிகர் சொன்ன தகவல்…

80களில் ரஜினி, கமல், பிரபு, விஜயகாந்த், சத்தியராஜ், கார்த்திக் என பலருடனும் ஜோடி போட்டு நடித்திருக்கிறார். விஜயகாந்துடன் அம்மன் கோவில் கிழக்காலே, உழவன் மகன், நினைவே ஒரு சங்கீதம், சட்டம் ஒரு விளையாட்டு, மணக்கணக்கு, மீனாக்‌ஷி திருவிளையாடல், உள்ளத்தில் நல்ல உள்ளம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

radha

விஜயகாந்த் மறைந்தபோது அவரின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார் ராதா. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ராதா ‘இப்படி ஒரு இடத்திற்கு வந்து விஜயகாந்தை பார்ப்பேன் என நான் கனவிலும் நினைக்கவில்லை. அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டபோதும் அவரின் மனைவி பிரேமலதா என் மகள் திருமணத்திற்கு நேரில் வந்து வாழ்த்திவிட்டு போனார். கண்டிப்பாக விஜயகாந்தின் ஆசிர்வாதங்களோடுதான் அவர் வந்திருப்பார்’ என பேசியிருந்தார்.

இதையும் படிங்க: விஜயகாந்த் நினைவிடத்தில் மோகன் செய்த நெகிழ்ச்சி செயல்!.. அட இவரும் கேப்டன் ரசிகன் போல!..

இந்நிலையில், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய ராதா ‘மண்வாசனை என்றால் அது விஜயகாந்துதான். அவருடன் படப்பிடிப்பில் இருந்தால் பாதுகாப்பாக உணரலாம். அவ்வளவு நல்ல மனிதர். எதிர்பார்ப்பு இல்லாமல் எல்லோருக்கும் உதவி செய்வார். அவருடன் மீனாக்‌ஷி திருவிளையாடல் படத்தில் நடித்தேன்.

meenakshi

அவர் சிவனாகவும், நான் பார்வதியாகவும் இருக்க ஒரு பாடல் காட்சி எடுக்கப்பட்டது. நான் பெரிய டேன்சர்.. ஆடுவது விஜயகாந்துதானே என சாதாரணமாக இருந்துவிட்டேன். ஆனால், சிவனாக அவர் நடித்த விதம், காட்டிய உடல் மொழி, அந்த பார்வை என அசத்திவிட்டார். இப்போது போல போது மானிட்டர்கள் இல்லை. எடுத்த காட்சியை உடனே பார்க்க முடியாது. தியேட்டரில் பார்த்தபின் ‘அட விஜயகாந்த் இப்படி நடிப்பார் என தெரிந்திருந்தால் நாமும் நன்றாக நடித்திருக்கலாம்’ என எனக்கு தோன்றியது’ என ராதா கூறினார்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.