Cinema History
இந்த மாதிரி ஒரு படத்துல நடிக்கணும்!.. கவுண்டமணியின் தீராத ஆசை. அட நடக்காமலேயே போயிடுச்சே!..
கோவையை சேர்ந்த கவுண்டமணி விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். இவரின் குடும்பத்துகும் சினிமாவுக்கும் எட்டா தூரம்தான். இவருக்கு அம்மா அப்பா வைத்த பெயர் சுப்பிரமணி. சுப்பிரமணிக்கு சிறு வயது முதலே நடிப்பின் மீது அலாதி பிரியம். ஒருகட்டத்தில் நாடகங்களில் நடிக்க துவங்கினார்.
கலைஞர் கருணாநிதி, கண்ணதாசன் ஆகியோர் எழுதிய நாடகங்களிலும் கவுண்டமணி நடித்திருக்கிறார். சினிமாவை விட நாடகங்களில்தான் அதிக கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்திருக்கிறார். கருப்பு வெள்ளை காலத்திலேயே சின்ன சின்ன வேடங்களில் நடித்திருக்கிறார்.
இதையும் படிங்க: செந்திலுக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்த கவுண்டமணி.. அதன் சுவாரஸ்ய பின்னணி இதோ
நாடகங்களில் யார் என்ன வசனம் சொன்னாலும் அதற்கு சரியான கவுண்டர் கொடுப்பார். அதனால் அவருக்கு கவுண்ட்டர் மணி என பெயர் வந்தது. பாரதிராஜா இயக்கிய பதினாறு வயதினிலே படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார். அந்த படத்தில் அவரின் பெயரை டைட்டில் கார்டில் போடும்போது கவுண்டமணி என தவறாக பாக்கியராஜ் எழுதி கொடுக்க அதுவே அவரின் பெயராக மாறிவிட்டது.
காமெடி, ஹீரோ, குணச்சித்திரம் என பல வேடங்களில் நடித்து அசத்தியிருக்கிறார். 90களில் மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்த கவுண்டமணி பல படங்களிலும் இரண்டாவது ஹீரோவாகவே நடித்தார். ஹீரோவுக்கு ஒரு ஜோடி எனில் இவருக்கும் ஒரு ஜோடி இருக்கும். ஹீரோ டூயட் பாடும்போது இவரும் அருகில் இருப்பார்.
இதையும் படிங்க: பண விஷயத்தில் கறார் காட்டிய கவுண்டமணி.. கேப்டன் மனசு யாருக்கு வரும்? கங்கை அமரன் பகிர்ந்த சீக்ரெட்
தினமும் இத்தனை லட்சம் சம்பளம் பேசிய முதல் காமெடி நடிகர் இவர்தான். உடல்நிலை பாதிக்கப்பட்டு சினிமாவிலிருந்து அவர் விலகியிருந்த போது வடிவேல், விவேக், சந்தானம் ஆகியோர் பெரிய அளவில் வளர்ந்தனர். அவ்வப்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார். இப்போது கூட யோகிபாபுவுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்திருக்கிறார்.
ஒரு திரைப்படத்தில் அசத்தல் வில்லனாக நடிக்க வேண்டும் என்கிற ஆசை கவுண்டமணிக்கு இருந்தது. ஆனால், அது கடைசிவரை நடக்கவில்லை. அதேநேரம், பல நாடகங்களில் வில்லனாக கவுண்டமணி நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.