மனைவி பட வெற்றி விழாவுக்கு போகாத சூர்யா!.. இதுதான் காரணம்.. மேடையில் போட்டு உடைத்த ஜோதிகா!..

Published on: February 24, 2024
---Advertisement---

மலையாளத்தின் முன்னணி நடிகர் மம்மூட்டி 72 வயதிலும் தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். குறைவான பட்ஜெட்டில் உருவாகும் படங்கள் நல்ல லாபத்தை ஈட்டி வருகின்றன.

கடந்த ஆண்டு மம்மூட்டி நடிப்பில் வெளியான கண்ணூர் ஸ்குவாட் மற்றும் காதல் தி கோர் படங்கள் வெற்றியடைந்த நிலையில், இந்த ஆண்டு வெளியான பிரமயுகம் திரைப்படமும் வெற்றி பெற்றது.  இந்நிலையில், கண்ணூர் ஸ்குவாட் மற்றும் காதல் தி கோர் உள்ளிட்ட படங்களின் வெற்றி விழாவை சமீபத்தில் பிரம்மாண்டமாக கேரளாவில் மம்மூட்டி நடத்தியிருக்கிறார்.

இதையும் படிங்க: இந்தப் படம் மட்டும் வந்திருந்தா ‘அவ்வைசண்முகி’க்கு வாய்ப்பே இருந்திருக்காது.. நல்ல வேலை பண்ணாரு கமல்

அந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய ஜோதிகா இந்நேரம் என் கணவர் சூர்யாவும் இங்கே இருந்திருக்க வேண்டியவர். இந்த படம் அவருக்கு ரொம்பவே ஃபேவரைட்டான படம். காதல் தி கோர் பண்ணும் போது அந்தளவுக்கு எனக்கு சப்போர்ட் செய்தார் சூர்யா.

ஆனால், தற்போது அவருடைய கங்குவா படத்தின் டப்பிங்கில் அவர் இருப்பதால், இங்கே வர இயலவில்லை. இப்படியொரு வாய்ப்பை எனக்கு கொடுத்ததற்கு மம்மூட்டி சாருக்கு எத்தனை தடவை நன்றி சொன்னாலும் பத்தாது என கேரளாவில் தமிழில் பேசி நன்றி தெரிவித்த ஜோதிகாவின் வீடியோ வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: அட போங்காட்டம் புடிச்ச சந்தீப் ரெட்டி வங்கா!.. சூர்யா படத்துல இருந்து சீனை ஆட்டையை போட்டுட்டாரா?

நேற்று முன் தினம் பல ஆண்டுகளுக்குப் பிறகு மாதவன் உடன் இணைந்து நடித்த ஜோதிகாவின் ஷைத்தான் திரைப்படத்தின் டீசர் வெளியானது. அந்த படத்தில் அஜய் தேவ்கனுக்கு மனைவியாகவும் வயது வந்த மகளுக்கு அம்மாவாகவும் ஜோதிகா நடித்திருக்கிறார்.

வசியம் செய்யும் நபராக மாதவன் அஜய் தேவ்கன், ஜோதிகா வீட்டுக்கு வந்து அவர்களின் மகளை வசியம் செய்து தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து டார்ச்சர் கொடுப்பதை செம த்ரில்லிங்காக உருவாக்கி உள்ளனர். மார்ச் 8ம் தேதி ஜோதிகாவின் அந்த படமும் திரைக்கு வருகிறது.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.