Cinema History
சேது படத்தின் கதையை கார்த்திக்கிடம் சொன்ன பாலா!.. நவரச நாயகன் அடித்த நச் கமெண்ட்!..
இயக்குனர் பாலாவின் படங்கள் என்றால் அதில் நடிகர்கள் நடிப்பதற்கு பெரிய ஸ்கோப் இருக்கும். அவரது முகத்தையே மாற்றி விடுவார். நடிகர்களிடம் இருந்து சக்கையாகப் பிழிந்து வேலையை வாங்கி விடுவார். ஆனால் படம் மாஸ் ஹிட்டாகி விடும். அப்படிப்பட்ட இயக்குனர் பாலாவைப் பற்றி எழுத்தாளர் ராஜகம்பீரன் என்ன சொல்கிறார்னு பார்க்கலாமா…
இயக்குனர் பாலுமகேந்திராவின் சீடர் தான் பாலா. சேது படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இதுதான் பாலாவை தமிழ்த்திரை உலகம் கவனிக்க வழிவகுத்தது. சேது படம் மாதிரி கருத்தை அதுவரை எந்தப்படமும் பேசவில்லை. காதலால் மனப்பிறழ்வுக்கு ஆளாகி தன் காதலியையே அடையாளம் காணமுடியாமல் தவிக்கிறான் கதாநாயகன். இதுபோன்ற கதையை பலரிடமும் பாலா சொன்னாராம். அந்த வகையில் நவரச நாயகன் கார்த்திக்கிடமும் சொல்லியிருக்கிறார். அதற்கு அவர், நான் மொட்டை போட்டு நடிக்கிறதா? தியேட்டரையே உடைச்சிருவாங்கன்னு சொல்லிட்டாராம்.
அதனால இது ஒரு வித்தியாசமான கதை, வன்முறையின் மறுபக்கம் என எடுத்திருப்பார் பாலா. பாலுமகேந்திராவின் படங்கள் மென்மையானவை. மௌனமாக இருப்பது தான் அவருக்குப் பிடிக்கும். அவரிடம் இருந்து யதார்த்தத்தைக் கற்றுக் கொண்ட பாலா, வன்முறையின் யதார்த்தத்தையும் புகுத்தி விடுகிறார். சேது, பருத்திவீரன் என இரண்டுமே ஹீரோயிசத்தை உடைக்கிற படம். சேது படத்துல கதாநாயகனையே காப்பாற்ற முடியாது. பருத்திவீரன் படத்துல கதாநாயகன், கதாநாயகியையேக் காப்பாற்ற முடியாது.
பாலாவின் படங்களில் பெரிய நட்சத்திரங்கள் வராததற்குக் காரணமே இதுதான். வெற்றிமாறனும் இந்த வகை தான். அவரும் தனுஷைத் தாண்டி பெரிய நட்சத்திரங்களை அணுக முடியாததற்கு காரணம் இதுதான். அவரும் ஹீரோயிசத்தை உடைக்கும் கேரக்டர் தான். நான் கடவுள் படத்தில் முதலில் அஜீத் நடிப்பதாகத் தான் இருந்தது. ஆனால் அந்தப் படம் அவருக்கு செட்டாகாததால் அவர் நடிக்கவில்லை. பேச்சுவார்த்தையோடு நின்று போனது. அதே போல தான் சூர்யா நடிக்க வேண்டிய வணங்கான் படமும் நின்று போனது. இவ்வாறு அவர் பேசினார்.