அஜித் படத்தில் நடந்த சூப்பர் இன்ஸிடண்ட்.. அமிதாப்பே பார்த்து மெய்சிலிர்த்த சம்பவம்! பின்ன நாங்கலாம் யாரு?

Published On: February 25, 2024
amithab
---Advertisement---

Actor Ajith: ஒவ்வொரு படப்பிடிப்பு சமயத்திலும் எதாவது ஒரு மறக்க முடியாத சம்பவம் ஒன்று இருக்கும். அந்த வகையில் பிரபல இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் சமீபத்தில் ஒரு சுவாரஸ்ய சம்பவத்தை ஒரு டிவி நிகழ்ச்சியில் கூறி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

தமிழ் சினிமாவிலேயே ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார். சரத்குமார், ரஜினி, கமல் , பிரபு என 90களில் கொடி கட்டி பறந்த அனைத்து நடிகர்களுடனும் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்தவர்.

இதையும் படிங்க: ரசிகர்களை கவர்ந்த நவராத்திரி… சிவாஜி 9 வேடங்களில் நடிக்க காரணமே இதுதான்!..

ஒவ்வொரு நடிகரின் வெற்றி லிஸ்ட்டில் கண்டிப்பாக ரவிக்குமாரின் படமும் இடம்பெற்றிருக்கும். அந்த வகையில் அஜித்துக்கு வரலாறு மற்றும் வில்லன் போன்ற அசத்தலான படங்களை கொடுத்து அஜித்தை வேறொரு பரிணாமத்தில் காட்டியவர் ரவிக்குமார்.

வில்லன் படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் நடந்த ஒரு நிகழ்வைத்தான் சமீபத்தில் ரவிக்குமார் பகிர்ந்தார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு நியூஸிலாந்தில் நடைபெற்றுக் கொண்டிருந்ததாம். அப்போது மணி கிட்டத்தட்ட 1 மணி இருக்குமாம். உடனே அஜித் ‘சார் சாப்பிட போலாமா? ரொம்ப பசிக்குது’ என ரவிக்குமாரிடம் கூற அருகில் இருந்த ஹோட்டலுக்கு அனைவரும் சென்றிருக்கின்றனர்.

இதையும் படிங்க: எம்ஜிஆர் சந்தித்த பிரச்சினையை விஜயும் சந்திப்பாரா? ‘கோட்’ படத்தில் இருக்கும் இடியாப்ப பிரச்சினை

அங்கு இரண்டு பாடல்களை எடுக்க திட்டமிட்டிருந்தார்களாம். அதே ஹோட்டலில் இந்தி படத்தின் படப்பிடிப்பிற்காக வந்த ஹிருத்திக் ரோசன், கரீனா கபூர், அமிதாப் பச்சனும் இருந்தார்களாம். அதன் பின் ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்திக் கொண்டு சாப்பிட உட்கார்ந்தார்களாம்.

அப்போது ரவிக்குமாரின் உதவியாளர் ஒருவர் ‘சார் சார் அங்கே பாருங்க ஸ்நோ ஃபால்ஸ்’ என்று சொன்னதும் சாப்பிட்டதையும் விட்டுவிட்டு கேமிராவை தூக்கிக் கொண்டு அந்த காட்சியில் பாடலை படமாக்க ஓடியிருக்கிறார்கள். ஏனெனில் ஸ்நோ ஃபால்ஸ் எப்போது வரும் என்றே தெரியாது. இதை கவனித்துக் கொண்டிருந்த அமிதாப் அவருடன் வந்த படக்குழுவை அழைத்து ‘பாருங்க. தமிழ் சினிமாக்காரங்க எவ்வளவு டெடிகேட்டடா இருங்க. ஒரு ஸ்நோ ஃபால்ஸில் ஒரு சரணத்தையே முடிச்சிட்டான் அந்த ஆளு’ என ரவிக்குமாரை பற்றி ஹிந்தியில் கூறி அவரின் யுனிட் ஆட்களை திட்டினாராம்.

இதையும் படிங்க: எங்க போனாலும் அண்ணனுக்கு தனி ப்ரோமோஷன் செய்றதுல அட்லீ கில்லிதான்.. என்ன சொல்லி இருக்கார் தெரியுமா?

அந்த பாடல்தான் வில்லன் படத்தில் அஜித்தும் மீனாவும் சேர்ந்து டூயட் பாடிய ‘இதே மனம் இதே சுகம்’ என்ற பாடல்.