Jayam Ravi: பொன்னியின் செல்வம் ஹிட்டை தொடர்ந்து ஜெயம் ரவி கோலிவுட்டில் நிறைய படங்களை கைவசம் வைத்து இருக்கிறார். அந்த வகையில் அவர் நடிக்கும் தக் லைஃப் படம் குறித்து ஒரு ஆச்சரிய தகவலை வெளியிட்டு இருக்கிறார்.
கோலிவுட்டில் இளம் கதாநாயகனாக வலம் வந்த ஜெயம் ரவிக்கு செகண்ட் இன்னிங்ஸ் உருவாக்கி கொடுத்தது என்னவோ பொன்னியின் செல்வன் திரைப்படம் தான். அப்படத்தை தொடர்ந்து, அவர் கைவசம் நிறைய திரைப்படங்கள் வரிசையில் இருக்கிறது.
Also Read
இதையும் படிங்க: எம்.ஆர்.ராதா நடிப்பு சரியில்ல!.. போட்டு உடைத்த இயக்குனர்!.. நடிகவேள் செஞ்சதுதான் ஹைலைட்!..
அகிலன், இறைவன் படங்களில் தோல்வியை தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியான சைரன் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து அவரின் பிரதர் திரைப்படம் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை நெருங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. அதிலும் கமல்ஹாசனின் தக் லைஃப் திரைப்படத்தில் ஒரு முக்கிய வேடம் என கிசுகிசுக்கப்பட்டது.
இதுகுறித்து சமீபத்திய பேட்டியில் சொல்லி இருக்கும் ஜெயம் ரவியிடம் டூயல் ஹீரோ படங்களில் தொடர்ந்து நடிப்பீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், தக் லைஃப் திரைப்படத்தில் என்னை நடிக்க மணி சார் கேட்டபோது என்னால் நோ சொல்ல முடியவில்லை. அப்படத்தில் நான் கேமராலில் மட்டுமே நடிக்கிறேன்.
இதையும் படிங்க: ரத்தம் சொட்ட சொட்ட நடித்த எம்.ஆர்.ராதா!.. வாக்கு கொடுத்தா மனுஷன் இப்படி மாறிடுவாராம்!..
மிகப்பெரிய லைன் அப்களை வைத்திருக்கும் ஜெயம் ரவி ஒரே நேரத்தில் மூன்று படங்களை இயக்க இருப்பதாகவும் புதிய தகவல்கள் கோலிவுட் வட்டாரத்தில் உலா வருகிறது. அவரின் முதல் படத்தின் நாயகனாக யோகி பாபுவை ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.



