Connect with us
mgr

Cinema History

கை நழுவிப்போன முதல் ஹீரோ பட வாய்ப்பு!.. ஹீரோவா நடிக்க எம்.ஜி.ஆர் பட்ட பாடு!..

ஏழு வயது முதலே நாடகங்களில் நடிக்க துவங்கியவர் எம்.ஜி.ராமச்சந்திரன். நாடகங்களில் பல வேடங்களிலும் நடித்திருக்கிறார். ஆனால், திரைப்படங்களில் அநியாயத்தை தட்டி கேட்கும் இளைஞராகவே பெரும்பாலான படங்களில் நடித்திருக்கிறார். பெரும்பாலும் ஏழை மக்களுக்கு ஆதரவாகவும், ஆதிக்க வர்க்கத்துக்கு எதிராகவும் குரல் கொடுக்கும் வேடங்களிலேயே தொடர்ந்து நடித்தார்.

அவரின் படங்களில் இடம் பெற்ற பாடல் வரிகளும் அதை பிரதிபலிக்கும். ‘நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்’ என பாட்டு பாடியே முதலமைச்சர் ஆனவர் அவர். சினிமாவில் எப்படியோ அப்படி நிஜத்திலும் எம்.ஜி.ஆர் இருப்பார் என நம்பியே மக்களும் அவருக்கு வாக்களித்தனர். அவரும் தன்னால் முடிந்த அளவுக்கு நன்மைகளை செய்து விட்டு போனார். நிறைய பேருக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்திருக்கிறார்.

இதையும் படிங்க: கோடியை தாண்டி வசூல் செய்த முதல் படம்!.. அப்பவே மாஸ் காட்டிய எம்.ஜி.ஆர்!.. அட அந்த படமா?!..

சினிமாவில் ஹீரோவாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைப்பது என்பது சுலபமில்லை. இப்போது மட்டுமில்லை. அந்த காலக்கட்டத்திலும் அப்படித்தான் இருந்தது. ‘இவர்தான் ஹீரோ’ என்பதில் இயக்குனர் அல்லது தயாரிப்பாளர் என யாரேனும் ஒருவர் உறுதியாக இருக்க வேண்டும். பராசக்தி படம் உருவானபோது கூட சிவாஜியை ஹீரோவாக நடிக்க வைப்பதில் ஏவி மெய்யப்ப செட்டியாருக்கு உடன்பாடு இல்லை. ஆனால், சிவாஜியின் நாடக ஆசிரியரும், ஏவிஎம் நிறுவனத்தோடு இணைந்து அப்படத்தை தயாரித்த பெருமாள் முதலியார் ‘சிவாஜிதான் ஹீரோ’ என்பதில் உறுதியாக இருந்தார்.

mgr

1936ம் வருடம் வெளியான சதிலீலாவதி படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கியவர் எம்.ஜி.ஆர். அதன்பின் பல திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் எம்.ஜி.ஆர் நடித்து வந்தார். சதிலீலாவதி படம் வெளியாகி 5 வருடங்கள் கழித்து ‘சாயா’ என்கிற படத்தில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பக்‌ஷிராஜா புரடெக்‌ஷன்ஸ் என்கிற நிறுவனம் இப்படத்தை தயாரித்தது.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் பாட்டை வச்சிதான் அந்த பாட்டை போட்டேன்!.. கமல்தான் கேட்டார்!.. இளையராஜா சொன்ன சீக்ரெட்!..

இந்த படத்தில் அப்போது பிரபலமாக இருந்த நடிகை டிவி குமுதினி கதாநாயகியாக நடித்தார். அப்போது பாலிவுட்டில் ஹிட் படங்களை இயக்கிவந்த நந்திலால் ஜஸ்வந்த்லாலா என்பவர் இப்படத்தை இயக்கினார். எம்.ஜி.ஆரையும், குமிதினியையும் வைத்து சென்னை தாம்ஸ் மவுண்ட் சிலைக்கு அருகே சில காட்சிகளையும் அவர் எடுத்தார்.

ஆனால், இந்த படத்தில் எம்.ஜி.ஆர் ஹீரோவாக நடிப்பது அவருக்கு பிடிக்கவில்லை. அவருக்கு பதில் பியூ சின்னப்பாவை நடிக்க வைக்கலாம் என நினைத்தார். ஆனால், சில காரணங்களால் ‘சாயா’ திரைப்படம் டிராப் ஆகிவிட்டது. அதன்பின் 1947ம் வருடம் ராஜகுமாரி என்கிற படம் மூலம் எம்.ஜி.ஆர் ஹீரோவாக நடிக்க துவங்கி தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத ஆளுமையாக மாறினார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top