Cinema History
அந்த பாட்டை பாலு மூச்சி விடாமலாம் பாடல!.. உங்களை ஏமாத்திட்டோம்!. பகீர் கிளப்பும் கங்கை அமரன்..
ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த பாடகராக இருப்பவர் பாலசுப்பிரமணியம். அதற்கு காரணம் அவரின் தேன் சொட்டும் குரல்தான். தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் சேர்த்து 30 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை எஸ்.பி.பி பாடியிருக்கிறார். 60களின் இறுதியில் தமிழ் சினிமாவில் பாட வந்த பாடகர் இவர்.
80களில் ரஜினி, கமல், மோகன், விஜயகாந்த், பிரபு, சத்தியராஜ் என அப்போது முன்னணி நடிகராக இருந்த எல்லோருக்கும் பாடல்களை பாடியது இவர்தான். சில பாடல்களுக்கு தேசிய விருதையும் பெற்றிருக்கிறார். பாடகராக மட்டுமின்றி நடிகர், தயாரிப்பாளராகவும் தன்னை வளர்த்துக்கொண்டவர் எஸ்.பி.பி.
இதையும் படிங்க: இதனால்தான் சால்வையை தூக்கி எறிந்தேன்!. விளக்கம் கொடுத்து வருத்தம் தெரிவித்த சிவக்குமார்!…
இளையராஜாவின் இசையில் இவர் பாடிய அனைத்து பாடல்களுமே முத்தான பாடல்கள்தான். பாடகர் என்பதை தாண்டி எல்லோரிடமும் அன்பாக பழகும் இவரின் குணமே பலரையும் இவரை பிடிக்க காரணமாக இருந்தது. அதனால்தான் அவர் மரணமடைந்தபோது பலரும் அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.
எஸ்.பி.பி. சினிமாவில் பல பாடல்களை அசாத்திய திறமையோடு பாடியிருக்கிறார். அதில் ஒன்றுதான் கேளடி கண்மணி படத்தில் இடம் பெற்ற ‘மண்ணில் இந்த காதல் இன்றி’ பாடல். இந்த பாடலின் சரணத்தில் எஸ்.பி.பி மூச்சு விடாமல் பாடினார் என்றே சொல்லப்பட்டு பல வருடங்களாக அது நம்பப்பட்டும் வந்தது.
இதையும் படிங்க: ஹாட்ரிக் பிளாப்!.. இப்படியே போனா மார்கெட் காலிதான்!.. சுதாரிப்பாரா ஜெயம் ரவி?!..
ஆனால், அதில் உண்மையில்லை என இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். சரணத்தில் வரும் வரிகளை தனித்தனியாகத்தான் பாலு பாடினார். தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அதை இணைத்து அந்த பாடலை உருவாக்கினோம். கேட்பதற்கு அவர் மூச்சுவிடாமல் பாடியது போலவே உங்களுக்கு தோன்றும்’ . அது ஒரு ச்சீட்டிங்க்தான்.
ஆனால், பல இசை நிகழ்ச்சிகளில் பலரும் அந்த பாடலை மூச்சிவிடாமல் பாடுவதை பார்க்க ஆச்சர்யமாக இருக்கிறது’ என சொல்லி இருந்தார். ‘சினிமா என்றால் இருப்பது போல காட்டுவதுதான். ரசிகனை ஏமாற்றும் கலைதான் சினிமா’ என ஒரு இயக்குனர் ஒருமுற சொன்னார். கங்கை அமரன் சொல்வதை பார்க்கும்போது அது உண்மைதான் என்பது உறுதியாகிறது.