சரத்குமார் – நக்மா காதலால் பாதிக்கப்பட்டவன் நான்! தயாரிப்பாளர் பட்ட வேதனை.. இப்படிலாம் நடந்துருக்கா

Published on: February 28, 2024
sarath
---Advertisement---

Sarathkumar Nagma: சினிமாவை பொறுத்தவரைக்கும் காதல் என்பது முக்கிய அங்கமாகவே மாறிவிடுகிறது. இன்று பெரிய பெரிய உச்சத்தில் இருக்கும் நடிகர்கள் பல பேர் அவர்கள் வாழ்க்கையில் காதல் அனுபவத்தை கடந்துதான் வந்திருக்கிறார்கள். ரஜினியே ஒரு பேட்டியில் அவருடைய முதல் காதல் அனுபவத்தை பற்றி கூறினார்.

அதே போல் கமல் ஸ்ரீவித்யா காதல் அனைவரையும் பிரமிக்க வைத்திருந்தது. ஒரு பேட்டியில் கமலே ஸ்ரீவித்யாவை அவர் என் தோழி இல்லை. அழகான காதலி என வர்ணித்திருப்பார். இப்படி பல பேர் வாழ்க்கையில் காதல் சிறந்த அனுபவங்களை தந்திருக்கிறது. அந்த வரிசையில் சரத்குமாரும் இருக்கிறார். ஏற்கனவே ஆணழகனாக இருந்த சரத்குமார் பெண்களிடம் சகஜமாக பழகக் கூடியவர்.

இதையும் படிங்க: கோபிக்கு வேலை கொடுக்க ரெடியான பாக்கியா… கடுப்பில் இருக்கும் ராதிகா… இது நல்லா இருக்கே?

அதிலும் சினிமாவில் ஒரு சிறப்பான அந்தஸ்தை பெற்றவுடன் நடிகைகளிடம் அதிகமாகவே பழகியிருக்கிறார். மிகவும் எளிதாக ஜெல் ஆக கூடிய நடிகர் சரத்குமார். அதனால் நக்மாவுடன் சரத்குமார் காதலில் கிசுகிசுக்கப்பட்டார். இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணனிடம் சரத்குமார் நக்மா காதல் உண்மையா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த சித்ரா லட்சுமணன் சரத்குமார் நக்மா இடையிடையே காதல் இருந்தது உண்மைதான். அவர்கள் காதலால் அதிகம் பாதிக்கப்பட்டவன் நான்தான். ஏனெனில் நக்மாவை வைத்து நான் பெரியதம்பி படத்தை எடுத்துக் கொண்டிருக்கும் போது அவர்கள் காதலால் நக்மாவால் ஒழுங்காக படப்பிடிப்பிற்கு வரமுடியவில்லை. அதனால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டேன் என்று சித்ரா லட்சுமணன் கூறினார்.

இதையும் படிங்க: செல்ஃபி, சால்வை!.. சாமானியர்கள்ன்னா இளக்காரமா சிவகுமார்?.. நறுக்கென கேள்வி எழுப்பிய பிரபலம்!..

அதுமட்டுமில்லாமல் அந்தப் படத்தின் போது நக்மாவை ஹீரோ டச் செய்யாமல் நடிக்க வேண்டும் என்ற ரூல்ஸ் எல்லாம் போட்டதாக பல பத்திரிக்கைகளில் செய்திகளாக வெளிவந்தது.

ஆரம்பத்தில் தயாரிப்பாளராக சினிமாவில் அறிமுகமான சரத்குமார் முதல் படத்திலேயே பெரிய தோல்வியை தழுவினார். அதன் பிறகுதான் நடிக்கலாம் என முடிவெடுத்த பிறகு கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் புரியாத புதிர் என்ற படத்தில் நடித்தார். இதனை தொடர்ந்து வில்லனாகவும் பல படங்களில் நடித்த சரத்குமார்,

இதையும் படிங்க: செல்ஃபி, சால்வை!.. சாமானியர்கள்ன்னா இளக்காரமா சிவகுமார்?.. நறுக்கென கேள்வி எழுப்பிய பிரபலம்!..

நாட்டாமை, சூர்யவம்சம் , நட்புக்காக போன்ற படங்களில் ஹீரோவாக நடித்ததன் மூலம் ஒரு சுப்ரீம் ஸ்டாராக மாறினார். சரத்குமார் மற்றும் நக்மா இருவரும் சேர்ந்து மூவேந்தர் என்ற படத்தில் சேர்ந்து நடித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.