Cinema History
மெரீனா பீச்சில் உருவான செம காமெடி படம்…! சும்மா பேசிப் பேசியே டெவலப் பண்ணினதுதானாம்..
1964ல் காதலிக்க நேரமில்லை படம் ரிலீஸ். இப்போது இதற்கு 60 வயது. காதலிக்க நேரமில்லை படத்திற்கு வசனம் எழுதியவர் சித்ராலயா கோபு. இவரது மகன் கதாசிரியர் சித்ராலயா ஸ்ரீராம் இந்தப் படத்தைப் பற்றி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
படத்தில் பாலையாவை அறிமுகப்படுத்துற காட்சி செம மாஸா இருக்கும். நெஞ்சில் ஓர் ஆலயம் போன்ற அழுத்தமான கதைகளை எடுத்தவர் இயக்குனர் ஸ்ரீதர். அவரிடம் அப்பா நாம ஒரு சேஞ்சுக்கு காமெடி படம் கொடுப்போம்னு சொன்னாரு. அதுக்கு இது ஒர்க் அவுட்டாகுமான்னு ஸ்ரீதர் கேட்க, ட்ரை பண்ணுவோம்னு சொன்னாரு அப்பா. அப்புறம் ஒரு வாரத்துல மெரீனா பீச்ல உட்கார்ந்து ரெண்டு பேரும் பேசிப் பேசி கதையை ரெடி பண்ணினாங்களாம்.
அது ஒரு கதையே கிடையாது. ஆனா பேசி பேசி பேசி அந்தக் கதையை டெவலப் பண்ணுனாங்க. ஸ்ரீதர் சாருக்கும், அப்பாவுக்கும் சரி. மெரீனா பீச் மேல பெரிய லவ். ஸ்ரீதர் சாரோட எந்தப் படத்தைப் பார்த்தாலும் அதுல மெரீனா பீச் வரும். மயக்கமா, கலக்கமா பாடல்ல இருந்தே வரும். அந்தக் காலத்துல மெரீனா பீச் எப்படி இருந்ததுன்னு பார்க்கணும்னா ஸ்ரீதர் சாரோட படத்தைப் பார்க்கலாம்.
சின்ன வயசுல அப்பாவும், ஸ்ரீதர்சாரும் சேர்ந்து தான் நாடகம் எல்லாம் போடுவாங்க. ஸ்ரீதர் ஹீரோ. அப்பா காமெடியன். கல்யாணப்பரிசு படத்துல தான் ரெண்டு பேரும் சேர்ந்து முதல்ல ஒர்க் பண்ணுனாங்க. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். கல்யாணப்பரிசு படத்துல தங்கவேலுவோட மன்னார் அண்ட் கம்பெனி காமெடியை இப்போது பார்த்தாலும் விழுந்து விழுந்து சிரிக்கலாம்.
காதலிக்க நேரமில்லை படத்தில் ரவிச்சந்திரன், காஞ்சனா, டிஎஸ்.பாலையா, முத்துராமன், நாகேஷ், சச்சு உள்பட பலர் நடித்துள்ளனர். எம்எஸ்.விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை அமைத்துள்ளனர். படம் முழுக்க முழுக்க காமெடி பட்டையைக் கிளப்பும் என்பது குறிப்பிடத்தக்கது.