படத்தில் நடிப்பவர்கள் என்ன கொத்தடிமைகளா? தாங்கமுடியாத பாலாவின் அடாவடிகள்.. இவ்ளோ பேரா?

Published on: February 29, 2024
bala
---Advertisement---

Director Bala: பாலா ஒரு மிகச்சிறந்த படைப்பாளி என்பதை யாராலும் மறுக்க முடியாது. தான் நினைத்தது படத்தில் வரவேண்டும் என்பதற்காக எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் போகக் கூடியவர். மிகச்சிறந்த இயக்குனர் என்பதையும் தாண்டி சமீபகாலமாக பாலாவின் மீது அடிக்கடி பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. அவருக்கும் சூர்யாவுக்கும் இடையே எழுந்த வணங்கான் பிரச்சினையின் போதே இந்த சம்பவம் மெல்ல மெல்ல வரத் தொடங்கியது.

அதாவது வணங்கான் திரைப்படத்தில் இருந்து சூர்யா விலகக் காரணமே பாலாவின் செயல்தான் என்று சொல்லப்பட்டது. அதாவது சூர்யாவை கண்டபடி ஓடவிட்டிருக்கிறார் பாலா. நந்தாவில் இருந்த சூர்யா என நினைத்திருப்பார் போல பாலா. ஆனால் சூர்யாவோ இன்று ஒரு பேன் இந்தியன் ஸ்டாராக மாறியிருக்கிறார் என்பதை அவர் நினைத்துக் கூட பார்க்கவில்லை.

இதையும் படிங்க: கலைஞருக்கும் கண்ணதாசனுக்கும் எழுந்த மோதல்!.. படத்திலிருந்து விலகிய சிவாஜி!…

இது சூர்யாவுக்கு மட்டுமில்லை. அவர் எடுத்த படங்களில் நடிகர்கள் பட்ட கஷ்டத்தை அக்குவேர் ஆணிவேராக சொல்லியிருக்கிறார் பிரபல சினிமா பத்திரிக்கையாளர் செய்யாறு பாலா. சேது படத்தை பார்த்தாலே தெரியும். விக்ரம் எந்தளவுக்கு கஷ்டப்பட்டிருப்பார் என்று. ஆனால் அந்த நேரம் விக்ரமுக்கு ஒரு ஹிட் தேவைப்பட்டது. அதனால் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு நடித்தார்.

தனக்கு பாலாவால் ஒரு நல்ல எதிர்காலம் அமைந்ததை போல தன் மகனுக்கும் அமையவேண்டும் என்பதற்காக பாலாவை வைத்து துருவ் விக்ரமை வர்மா படத்தில் அறிமுகப்படுத்தினார் விக்ரம். ஆனால் துருவ்வை ஒரு பக்கா ப்ளே பாயாக காட்டினார் பாலா. அறிமுகப்படத்திலேயே படுக்கை அறை காட்சியில் மோசமாக நடிக்க வைத்தாராம் பாலா. ஆனால் அந்தப் படம் கைவிடப்பட்டு ஆதித்யா வர்மா என்ற தலைப்பில் வேறொரு இயக்குனர் மூலமாக படம் வெளியானது.

இதையும் படிங்க: ‘கருடன்’ படத்தில் சூரிக்கு 8 கோடி.. சசிகுமாருக்கு தெருகோடியா? பாலா செஞ்ச அட்டூழியம் எங்க வந்து நிக்குது?

பரதேசி படத்தில் பாலா அனைவரையும் ஒரு குச்சியால் அடுக்கும் ஒரு வீடியோ வைரலானது. ஆனால் அது தெர்மாகோல் குச்சி என சொல்லி சமாளித்தார். இருந்தாலும் வேதிகா அதனால் மிகவும் பாதிக்கப்பட்டார் என செய்யாறு பாலு கூறினார். அவன் இவன் படத்தில் நடித்ததில் இருந்தே விஷாலுக்கு உடலில் மாற்றம் ஏற்பட தொடங்கியது. படமுழுக்க மாறுகண்ணோடு நடிக்க வைத்து கடைசியில் அதுவே விஷாலுக்கு ஒரு குறையாகி போய்விட்டது.

இதில் அஜித்தும் விதிவிலக்கா என்ன? நான் கடவுள் படத்தின் போது முடியை இவ்ளோ சைஸில்தான் வெட்டவேண்டும். தாடியை எடுக்க கூடாது என்றெல்லாம் சில காலம் நீண்ட தலைமுடியுடனேயே அஜித் காணப்பட்டார். அதன் பிறகு காசிக்கு அழைத்துச் செல்லப்பட்டு தலைகீழாக நிற்க வைத்திருக்கிறார் பாலா. ஆனால் அஜித் அவருடைய உடல் நிலையை காரணம் காட்டி படத்தில் இருந்து விலகிவிட்டார்.

இதையும் படிங்க: வேற எதாச்சும் மாத்துங்கப்பா… செம மொக்கையா போகுது… காத்திருக்கும் சிறகடிக்க ஆசை ரசிகர்கள்…

அடுத்ததாக தாரத்தப்பட்டை படத்தில் வரலட்சுமிக்கு நேர்ந்த கொடுமை. உண்மையான கண்ணாடி ப்ளேடால் அடிக்க வைத்திருக்கிறார். இதில் வரலட்சுமிக்கு நான்கு தையல்கள் போடப்பட்டிருக்கிறது. சமீபத்தில் மமீதா என்ற கேரளா நடிகை வணங்கான் திரைப்படத்தில் பாலா தன்னை அடித்ததாக கூறப்பட்ட செய்தியும் இப்போதுவைரலாகி வருகின்றது. இப்படி தத்ரூபமாக வர வேண்டும் என்பதற்காக இந்தளவு மோசமாக நடந்து கொள்வது சரியா?

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.