Connect with us

Cinema History

அந்த விஷயத்தில் எம்ஜிஆர் – சிவாஜிக்கே முன்னோடியாக இருந்த ஜெய்சங்கர்..!

எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், ஏவிஎம்.ராஜன், முத்துராமன் என பலரும் திரை உலகில் கோலோச்சிய காலம். அப்போது தனக்கென தனித்துவமான நடிப்பைக் கொண்டு சினிமாவில் தனியிடத்தைத் தக்க வைத்துக் கொண்டவர் தான் நடிகர் ஜெய்சங்கர். இவரைப்பற்றிய சுவாரசியமான தகவல்களைப் பார்ப்போம்.

வக்கீல் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருக்கோ சினிமாவில் மோகம். அதனால் பல கம்பெனிகளில் ஏறி வாய்ப்புத் தேடினார். அப்போது தான் ஜோசப் தளியத் என்ற இயக்குனர் இந்தப் பையன்கிட்ட ஏதோ ஒரு திறமை இருக்கு என்பதைக் கண்டு கொண்டு தனது படத்தில் நடிக்க வைத்தார். அது தான் ஜெய்சங்கருக்கு முதல் படம். பெயர் இரவும் பகலும். முதல் படமே வெற்றி. அடுத்ததாக இவர் நடித்த படம் பஞ்சவர்ணக்கிளி. ஏவிஎம் படைப்பு. கே.சங்கர் இயக்கம்.

படத்தைப் பார்த்ததும் தாய்;மார்கள் அனைவருக்கும் இவரைப் பிடித்துவிட்டது. இவரது சுறுசுறுப்பைக் கண்டுகொண்டது மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம். இவரை மாதச்சம்பளம் பேசி நடிக்க வைத்தது. வல்லவன் ஒருவன், சிஐடி சங்கர் என பிரம்மாண்டமான படங்களைத் தந்து அசத்தியது. இந்தப் படங்கள் வசூலில் அபார சாதனை படைத்தது.

CID Sankar

CID Sankar

ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ்பாண்ட் பாணியில் தமிழ் சினிமாவில் துப்பறியும் நிபுணராக வந்து அசத்தினார். அவரது நடிப்பைப் பார்த்து ரசிகர்கள் தென்னகத்து ஜேம்ஸ்பாண்டு என்ற பட்டத்தையே கொடுத்துவிட்டனர். இன்னொரு விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டும். சிவாஜி நடித்த தங்கச்சுரங்கம், எம்ஜிஆர் நடித்த ரகசிய போலீஸ் படங்களுக்கு ஜெய்சங்கர் தான் முன்னோடி.

அதே நேரம் பொம்மலாட்டம், வரவேற்பு, பூவா தலையா என காமெடிப் படங்களிலும் ரசிகர்களை ரசிக்க வைத்தார் ஜெய்சங்கர். பாலசந்தர் இயக்கிய நூற்றுக்கு நூறு படம் மிகச்சிறந்த நடிகராக்கியது. எம்ஜிஆர், சிவாஜியை வைத்து படம் தயாரிக்க ஆசைப்பட்டவர்கள் அவர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் போனால் அவர்களது அடுத்த சாய்ஸ் ஜெய்சங்கர் தான். குறைந்த சம்பளத்தில் தயாரிப்பாளர்களுக்கு எந்தவிதமான இடைஞ்சலையும் தராமல் நடித்துக் கொடுத்து அசத்தினார். கால்ஷீட் சொதப்பல்களும் இருக்காது.

இவர் படங்கள் என்றாலே போட்ட பட்ஜெட்டுக்கு நாலு மடங்கு லாபத்தைத் தந்து விடும். இவர் நடிப்பில் யார் நீ, வைரம், செல்வமகள், டீச்சரம்மா, குழந்தையும் தெய்வமும், கண்ணன் வருவான், மன்னிப்பு, அவசர கல்யாணம் படங்கள் சினிமா ரசிகர்கள் அவசியம் பார்க்க வேண்டியவை.

 

google news
Continue Reading

More in Cinema History

To Top