Connect with us
mgr

Cinema News

எம்ஜிஆரை வச்சு படம் எடுத்தா விளங்குமா? இயக்குனருக்கு வந்த சிக்கல்.. எப்படி சமாளிச்சார் தெரியுமா?

Actor MGR: தமிழ் சினிமாவில் சிவாஜி, எம்ஜிஆர் என இருபெரும் ஆளுமைகள் பல ஆண்டுகளாக கோலோச்சி இருந்தார்கள். நடிகர் திலகம் என சிவாஜியும் மக்கள் திலகம் என எம்ஜிஆரும் கொண்டாடப்பட்டனர்.குடும்ப கதையை மையப்படுத்தியே சிவாஜியின் படங்கள் பெரும்பாலும் வெளிவந்திருக்கின்றன. அதனால் குடும்பங்களாக கொண்டாடும் படமாக சிவாஜியின் படங்கள் அமைந்தன.

அதைப் போல எம்ஜிஆரின் படங்கள் பெரும்பாலும் வாள்சண்டை, கத்திச்சண்டை அதில் கூடுதலாக அம்மா செண்டிமெண்ட் இருக்கும். இப்படி ஒருவருக்கொருவர் அவரவர் பாணியில் ரசிகர்களை கவர்ந்து வந்தனர். மேலும் தொழில் ரீதியாக இருவருக்கும் சரியான போட்டி இருந்து வந்தது. ஆனால் நிஜத்தில் இருவரும் அண்ணன் தம்பிகளாகவே நெருக்கமாக பழகி வந்தார்கள்.

இதையும் படிங்க: அப்டேட் தரலாம்னு தான் நினைச்சேன்… ரசிகர் திட்டியதால் இப்போ தரமுடியாது… பதிலடி தந்த வெங்கட் பிரபு…

இந்த நிலையில் இயக்குனர் ஸ்ரீதர் சிவாஜியை வைத்து வைர நெஞ்சம் என்ற படத்தை எடுத்துக் கொண்டிருந்தார். ஆனால் அந்தப் படத்தின் போது பெரும் பொருளாதார நெருக்கடியிலும் சிவாஜியின் கால்ஷீட் ஒழுங்காக கிடைக்காமலும் மிகவும் அவதிப்பட்டுக் கொண்டு வந்தார். அந்த நேரத்தில் எம்ஜிஆரை வைத்து ஒரு படம் எடுத்தால் நம் பிரச்சினைகள் எல்லாம் சரியாகிவிடும் என எண்ணியிருக்கிறார் ஸ்ரீதர்.

அதனால் ஒரு கதையை எம்ஜிஆரிடமும் போய் சொல்லியிருக்கிறார். எம்ஜிஆருக்கும் கதை மிகவும் பிடித்துப் போக உடனே பண்ணலாம் என சொல்லியிருக்கிறார். எம்ஜிஆரை வைத்து ஸ்ரீதர் இயக்கப் போகும் படம் என செய்தியை பார்த்ததும் மக்கள் ஸ்ரீதரை போட்டு வசைபாடியிருக்கின்றனர். எம்ஜிஆருக்கு என ஒரு பாணி இருக்கிறது. அதை ஸ்ரீதர் கெடுத்துருவார் போலயே என அனைவரும் சொல்லியிருக்கின்றனர். எம்ஜிஆரை வைத்து இவர் படம் எடுத்தால் விளங்குமா என்றும் பேசியிருக்கின்றனர்.

இதையும் படிங்க: வாழ்க்கையில நான் பண்ண பெரிய தப்பே அந்த படம்தான்!.. பஞ்சதந்திரம் பற்றி இப்படி சொல்லிட்டாரே!..

ஏனெனில் ஸ்ரீதர் பெரும்பாலும் காதல், குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களையே எடுப்பவர். அதனால்தான் இந்த மாதிரியான விமர்சனம் எழுந்திருக்கிறது. இருந்தாலும் எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல் எம்ஜிஆரை வைத்து படம் எடுத்து மிகப்பெரிய வெற்றியும் கண்டார் ஸ்ரீதர். அதுமட்டுமில்லாமல் அவருடைய எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்து விட்டதாம்.

Continue Reading

More in Cinema News

To Top