வேறலெவல் மாப்பிள்ளையை பிடித்த வரலட்சுமி!.. நிச்சயதார்த்த புகைப்படங்கள் உள்ளே!..

Published on: March 2, 2024
varalakshmi
---Advertisement---

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்த நடிகர் சரத்குமாரின் மகள்தான் வரலட்சுமி. விக்னேஷ் சிவன் இயக்கிய முதல் படமான போடா போடி படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கியவர் அவர். அதன்பின் சில படங்களில் கதாநாயாகியாக நடித்தார். ஆனால், பெரிய கண்களை கொண்ட இவருக்கு வில்லி வேடம் சிறப்பாக பொருந்தியது.

varalakshmi 2
varalakshmi 2

இதையடுத்து காவல் அதிகாரி மற்றும் வில்லி வேடங்களில் நடிக்க துவங்கினார். தமிழை விட தெலுங்கில் மிகவும் அதிக படங்களில் நடித்து வருகிறார். இப்போது தனுஷின் 50வது படமான ராயன் படத்தில் நடித்து வருகிறார். மேலும், கலர்ஸ் எனும் மலையாள படத்திலும், சபரி எனும் தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார்.

varalakshmi

சரத்குமாரின் முதல் மனைவிக்கு பிறந்தவர்தான் வரலட்சுமி. பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர் இவர். தமிழில் பல படங்களில் நடித்திருந்தாலும் தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, சண்டக்கோழி 2, சர்கார், மாரி 2 ஆகிய படங்கள் இவருக்கு முக்கிய படங்களாக அமைந்தது.

varalakshmi

நடிகர் விஷாலுக்கும் இவருக்கும் காதல் இருப்பதாக சொல்லப்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும் செய்திகள் வெளியானது. ஆனால், ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே பிரேக்கப் ஆனது. அதன்பின் சினிமாவில் நடிப்பதில் மட்டும் வரலட்சுமி கவனம் செலுத்தினார்.

varalakshmi

இந்நிலையில், மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிகோலய் சச்தேவ் என்பவருடன் அவருக்கு பிப்ரவரி முதல் 1ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டனர். விரைவில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. வரலட்சுமியின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

varalakshmi

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.