Connect with us

Cinema News

அட்லீக்கு இதை விட வேற என்ன வேணும்!.. தீபிகா படுகோன் கணவர் என்ன பண்ணாரு பார்த்தீங்களா!..

பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை அட்லீ இயக்கிய நிலையில், அடுத்து அவர் எந்த ஹீரோவை வைத்து படம் இயக்கப் போகிறார் என்றே தெரியவில்லை என பலரும் காத்திருக்கின்றனர்.

அல்லு அர்ஜுன் படத்தை தான் அடுத்து அட்லீ இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. புஷ்பா 2 படத்திற்கு பின்னர் தான் அல்லு அர்ஜுன் அடுத்த பட அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

இதையும் படிங்க: எஸ்.பி.பி. எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் முதல் படத்திலேயே இயக்குனர் எடுத்த ரிஸ்க்.!..

அம்பானி மகன் ஆனந்த் அம்பானி திருமண விழாவில் ஒட்டுமொத்த பாலிவுட் பிரபலங்களும் ஒன்றாக சேர்ந்த நிலையில், ஒரே அரட்டையாக அடித்து அந்த இரவு முழுவதும் கலகலப்பாக்கி உள்ளனர்.

அந்த நிகழ்ச்சியில் தனது குடும்பத்துடன் இயக்குநர் அட்லீயும் கலந்துக் கொண்டார். அட்லீயை பார்த்த தீபிகா படுகோன் கணவர் ரன்வீர் சிங் பாலிவுட் நடிகர்களுடன் ஒரு கேங்காக அட்லீயை சூழ்ந்துக் கொண்டார்.

இதையும் படிங்க: என்னடா கீழே இவ்ளோ ஓப்பனா இருக்கு!.. விடாமுயற்சி ஹீரோயின் இன்னைக்கு நைட் தூங்க விடமாட்டாங்க போல!..

அட்லீ, ரன்வீர் சிங் மற்றும் அர்ஜுன் கபூர் உள்ளிட்டோர் பேசிக் கொண்டிருக்கும் போது, அட்லீயை அடுத்து யார் கேட்ச் பண்ணப் போறாங்கன்னு மும்பை ஹீரோக்கள் எல்லாம் ஸ்லிப்பில் வரிசையாக கைகளை இப்படி ரெடியாக வைத்துக் கொண்டு அட்லீயை பிடிக்க காத்துக் கொண்டிருக்கின்றனர் என பேசியுள்ளார்.

ஷாருக்கான் நடித்து வந்த டான் படங்களின் வரிசையில் உருவாக உள்ள டான் 3 திரைப்படத்தில் நடிக்கப் போகும் ரன்வீர் சிங் அட்லீ பற்றி பேசிய வீடியோ ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. கோலிவுட்டில் விஜய்யை தவிர அட்லீயின் அருமை யாருக்கும் புரியவில்லை என்றும் பாலிவுட் நடிகர்கள் அட்லீயின் திறமையை எப்படி கொண்டாடுறாங்க பாருங்க என ரசிகர்கள் அந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.

 

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top