Connect with us

Cinema News

லக்கேஜ் தூக்க மட்டும் தான் நீ லாயக்கு!.. வேலைக்கார பெண்ணை துரத்திவிடும் ரஜினிகாந்த்.. ஷாக்கிங்!..

அம்பானி வீட்டுத் திருமண விழாவுக்கு தனது குடும்பத்துடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்றார். அவருடன் மனைவி லதா ரஜினிகாந்த், மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உள்ளிட்டோர் சென்றிருந்தனர். கூடவே ரஜினிகாந்த் குடும்ப லக்கேஜ்ஜை தூக்கிக் கொண்டு வேலைக்கார பெண்ணும் உடன் சென்றிருந்தார்.

அப்போது புகைப்படக் கலைஞர்கள் போட்டோ எடுப்பதை அறிந்துக் கொண்ட ரஜினிகாந்த் வேலைக்கார பெண்ணை மட்டும் போ போ என துர்த்தும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளன.

இதையும் படிங்க: இது சமாதி இல்லை சன்னதி!..ரஜினிக்கு தாஜ்மகால்.. வடிவேலு கோயிலாகவே மாத்திட்டாரே!.. அங்க போகலையா?

விஜய் ரசிகர்கள் மற்றும் அஜித் ரசிகர்கள் என பலரும் ரஜினிகாந்துக்கு எப்பவுமே இதே வேலை தான் என விளாசி வருகின்றனர். ஏற்கனவே தியேட்டருக்கு சென்ற போது கூட வேலைக்கார பெண்ணுக்கு அவமரியாதை செய்யப்பட்டது சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

சினிமாவில் மட்டும் தான் உழைப்பாளி, வேலைக்காரன் என டைட்டில் வைத்துக் கொண்டு ரிச் கெட் ரிச்சர், புவர் கெட் புவர் என வசனம் பேசி மக்களில் ஒருவன் என்றூ சொல்வதெல்லாம். ஆனால், நிஜத்தில் சுய ரூபமே வேறு என நெட்டிசன்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர்.

இதையும் படிங்க: கோடிகளில் புரளும் இளம் இயக்குனர்கள்!. லோகேஷ் கனகராஜ் சம்பளம் இத்தனை கோடியா?!..

அது ஃபேமிலி போட்டோ எடுப்பதற்காக அந்த அம்மாவை கொஞ்சம் தள்ளிப் போய் நிற்கச் சொல்லியிருக்கிறார். மத்தபடி அவங்களை அவர் எப்படியெல்லாம் பார்த்துக் கொள்கிறார் தெரியுமா என ரஜினிகாந்த் ரசிகர்கள் முட்டுக் கொடுத்து வருகின்றனர்.

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top