Cinema History
முதல் முறையாக 50 கோடியை சுருட்டி 2கே கிட்ஸை கவர்ந்த அந்த 3 படங்கள்!.. கெத்து காட்டும் ரஜினி…
தமிழ்த்திரை உலகில் 2கே கிட்ஸ்களுக்குத் தான் இப்போ டிரெண்ட், மீம்ஸ், பர்ஸ்ட் லுக், டீசர் என்ற வார்த்தைகள் எல்லாம் வந்துள்ளன. இவர்கள் தமிழ்ப்படங்களை வேறு கோணத்தில் அதாவது புதுப்புது பரிணாமங்களில் நவீன சவுண்ட் டிராக்கில் பார்க்க ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்களின் ஆசையும் பூர்த்தியாகி வருகிறது. அந்த வகையில் அவர்களைக் கவர்ந்த 3 படங்கள் அதுவும் முதலாவதாக 50 கோடியை வசூலில் குவித்த படங்களைப் பற்றிப் பார்ப்போம்.
கில்லி
இயக்குனர் தரணி இயக்கத்தில் 2004ல் வெளியான படம். விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். கபடி விளையாட்டை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இதில் விஜய் வேலு என்ற கதாபாத்திரத்தில் துள்ளலான நடிப்பைக் கொடுத்திருந்தார்.
இந்தப்படம் கமர்ஷியல் ஹிட் என்று சொல்லும் அளவுக்குக் காதல், காமெடி என அனைத்தும் கலந்து இருக்கும். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது. இந்தப்படம் 8 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 50 கோடி லாபத்தை ஈட்டியது.
சந்திரமுகி
பி.வாசு இயக்கத்தில் 2005ல் சந்திரமுகி வெளியானது. ரஜினி, பிரபு, ஜோதிகா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் ரஜினி வேட்டையன் என்ற கதாபாத்திரத்தில் வந்து கலக்கியிருப்பார். பாதிக்கப்பட்ட தன் நண்பனைக் காப்பாற்ற உயிரைப் பணயம் வைத்து ஒரு மனநல மருத்துவராக நடித்திருப்பார்.
இந்தப்படத்தில் ரஜினியைத் தவிர வேறு யார் நடித்திருந்தாலும் வெற்றி பெற்று இருக்காது. இன்னொரு காரணம் வடிவேலுவின் காமெடி. மாப்பு வச்சிட்டான்யா ஆப்பு… என்ற ஒரு காமெடி போதும். இந்தப் படம் 19 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 60 கோடிக்கு மேல் லாபத்தை ஈட்டியது.
அந்நியன்
ஷங்கர் இயக்கத்தில் 2005ல் அந்நியன் வெளியானது. இதில் விக்ரம், சதா, விவேக், பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். இதில் விக்ரம், அம்பி, அந்நியன், ரெமோ என முற்றிலும் மாறுபட்ட 3 கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இன்னும் 1000 ஆண்டுகள் ஆனாலும் இப்படி ஒரு படத்தை மறக்கவே முடியாது என்பதற்கேற்ப விக்ரம் நடித்துவிட்டார். இந்தப் படம் 21 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 57 கோடி லாபத்தை ஈட்டியது.