Connect with us
surya

Cinema News

ஒருத்தருக்கு ரசிகர்னாலே கண்டம்.. ஆனால் ரசிகர்களுக்காக சூர்யா செய்த மாஸ் சம்பவம்

Actor Surya: பொதுவாக தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மீது அதிக அக்கறையும் அன்பும் கொண்டவராக திகழ்ந்து வருகிறார் நடிகர் சூர்யா. சூர்யா நற்பணி மன்றம் சார்பாக தமிழகத்தில் ஆங்காங்கே பல ஊர்களில் ஏழை எளியவர்களுக்கு பல நல்ல உதவிகள் கிடைத்து வருகிறது. வெள்ள நிவாரண நிதியாக சூர்யாவின் ரசிகர்கள் ஒன்று சேர்ந்து ஏராளமான நற்செயல்களை செய்திருக்கின்றனர்.

அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சூர்யாவும் அவ்வப்போது ரசிகர்களை சந்தித்து உற்சாகப்படுத்துவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். கார்த்தி ரசிகர் மன்றம் சார்பாக தினந்தோறும் 10 ரூபாய்க்கு சாப்பாடு வழங்கப்பட்டு வருகின்றது.இப்படி அண்ணனும் தம்பியும் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் ரசிகர்களை பலம் வாய்ந்தவர்களாகவே வைத்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க: பணிப்பெண்ணை தள்ளிப் போக சொன்ன காரணமே இதுதான்! அம்பானி வீட்டு திருமணத்தில் நடந்த சம்பவம்

மேலும் தன் ரசிகருக்கோ அல்லது ரசிகரின் குடும்பத்துக்கோ ஏதாவது விபத்து ஏற்பட்டால் உடனே அந்த ரசிகரின் வீட்டிற்கே சென்று தேவையான பண உதவிகளையும் கொடுத்து அவர்கள் குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்வதையும் வழக்கமாக கொண்டிருக்கிறார் சூர்யா. இந்த நிலையில் தன் ரசிகர் ஒருவருக்கு விலையுயர்ந்த பொருளை பரிசாக கொடுத்திருக்கும் செய்திதான் இப்போது வைரலாகி வருகின்றது.

அதாவது சமீபத்தில் சென்னையை புரட்டிப் போட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சூர்யாவின் ரசிகர்கள் பல உதவிகளை செய்தனர். அவர்களில் ஒருவருக்குத்தான் இந்த விலையுயர்ந்த பொருளை பரிசாக கொடுத்திருக்கிறாராம். அதென்ன ஒருவருக்கு மட்டும் என்றுதானே கேட்கிறீர்கள். அதில்தான் ஒரு சுவாரஸ்யமே இருக்கிறது. அவர் ரசிகர்களில் பெரும்பாலானோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிசெய்தனர்.

இதையும் படிங்க: கொண்டாடப்படும் மஞ்சும்மெல் பாய்ஸ் படத்தின் ரியல் ஹீரோஸ்!.. நண்பேன்டா ஸ்டைலில் கலக்குறீங்களே …!

ஆனால் இந்த ரசிகர் மட்டும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விலங்குகளுக்கு உதவி செய்திருக்கிறார். நாய் , பூனை, மாடு என பல விலங்குகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுக் கிடந்தன. அவைகளுக்கு இந்த ரசிகர் உதவி செய்ததால் இந்த ரசிகர் ஒருவருக்கு மட்டும் விலையுயர்ந்த பொருளை பரிசாக கொடுத்திருக்கிறாராம் சூர்யா. இப்படியும் சில நடிகர்கள் இருக்கிறார்கள். ரசிகர்களை பார்த்தாலே அலர்ஜி என இருக்கும் அஜித் போன்ற நடிகர்களும் இருக்கிறார்கள்.

Continue Reading

More in Cinema News

To Top