Connect with us

Cinema News

அம்பானி வீட்டு திருமண விழாவில் ராம் சரணை அசிங்கப்படுத்திய ஷாருக்கான்?.. மேக்கப் ஆர்ட்டிஸ்ட் பகீர்!..

முகேஷ் அம்பானி மகன் ஆனந்த் அம்பானி ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியில் நாடு முழுவதும் ஏராளமான சினிமா பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர். பாலிவுட் நடிகர்கள் பெரும் கூட்டமாகவும் தென்னிந்தியாவிலிருந்து ரஜினிகாந்த், அட்லி மற்றும் ராம்சரண் குடும்பத்தினர் மட்டுமே பங்கேற்றுள்ளனர்.

நாட்டுக்கூத்து பாடலின் இந்தி வெர்ஷனில் பாலிவுட் முன்னணி நடிகர்களான சல்மான்கான், ஷாருக் கான் மற்றும் அமீர்கான் மூவரும் மேடை ஏறி நடனம் ஆடினார்கள். அப்போது ஷாருக் கான் ராம் சரண் மேடைக்கு வருமாறு அழைத்தார். இட்லி சாப்பிட்டது போதும் மேடைக்கு வாங்க ராம்சரண் என ஷாருக்கான் அழைத்த வீடியோ காட்சிகள் சோசியல் மீடியாவில் வைரலாகி சர்ச்சையை கிளப்பி வருகிறது.

இதையும் படிங்க: ஹேண்ட் பேக்கில் இவ்ளோ ஐட்டமா? கிரண் காட்டியதும் ஷாக்கான நிருபர்.. இதெல்லாமா காட்டுவீங்க?

மேலும் இது தொடர்பாக, ராம்சரண் மனைவி உபாசனாவின் மேக் அப் ஆர்ட்டிஸ்ட்டான ஜெபா ஹாசன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராம் சரணை இப்படி அசிங்கப்படுத்தி இருக்க கூடாது. அதற்குப் பின் அங்கிருந்து நான் கிளம்பி விட்டேன் என பதிவிட்டுள்ளார்.

ஷாருக்கான் அழைத்ததும் ராம்சரண் மேடையேறி சந்தோசமாக மூன்று கான்களுக்கு நடுவே நாட்டுக்கூத்து பாடலுக்கு நடனம் ஆடினார். அப்போதுதான் அவரது நடனத்தைப் பார்த்து ஷாருக்கான் தலைவணங்கி செய்த செய்கையை யாரும் கவனிக்கலையா, அவர்கள் நட்பு ரீதியாக கலாய்த்துக் கொள்வது எல்லாம் சர்ச்சையாக வேண்டாம் என ஷாருக்கான் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கில்லியில ஆரம்பிச்சது!.. கோட் வரைக்கும் மகேஷ் பாபுவை காப்பியடிக்கிறதை விடலையே விஜய்?..

ரஜினிகாந்த் பணிப்பெண்ணை தள்ளிப் போக சொன்னதில் தொடங்கி பல விஷயங்கள் எதெல்லாம் வீடியோக்களாக லீக் ஆகிறதோ அதெல்லாம் சோஷியல் மீடியாவில் ட்ரோல் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top