‘குணா’ பட ஹீரோயினுக்கு நடந்த டார்ச்சர்? இந்த நடிகையின் சகோதரியா அவங்க.. குகையை விட மர்மமா இருக்கே

Published on: March 5, 2024
guna
---Advertisement---

Guna Movie: மஞ்சுமெல் பாய்ஸ் ரிலீஸ் ஆனாலும் ஆனது. இங்கு கோலிவுட்டில் குணா படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். 1991 ஆம் ஆண்டு ரிலீஸான குணா படத்தில் கமல் மற்றும் ரோஷினி ஆகியோர் நடிக்க படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் வசூலில் மண்ணை கவ்வியது. அதற்கு காரணம் குணா படத்தோடு ரஜினியின் தளபதி படமும் ஒன்றாக ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆனதுதான் காரணம்.

தளபதி படம் ஒரு பக்கா கமெர்ஷியல் படமாக இருந்ததால் வசூலில் அந்தப் படம் சாதனை படைத்தது. கிட்டத்தட்ட 32 வருடங்களுக்கு பிறகு மீண்டும் குணா படத்தை பார்க்க ஓடிடியிலும் யுடியூப்பிலும் ரசிகர்கள் தேடி வருகிறார்கள். அதற்கு காரணம் மலையாளத்தில் ரிலீஸான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம்தான். அந்தப் படத்தில் குணா படத்தின் கண்மணி பாடலையும் சொருகி ரசிகர்களை பரவசப்படுத்தி விட்டார்கள்.

இதையும் படிங்க: வாலியை பார்த்தாலே சிவாஜி பாடும் அந்த பாடல்!… அந்த அளவுக்கு பிடிக்க காரணம் இதுதானாம்!..

மேலும் குணா படத்தில் காதலியை அடைத்து வைத்திருக்கும் அந்த குகையில்தான் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் சில காட்சிகளும் எடுக்கப்பட்டிருக்கும். அதன் காரணமாகவே மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படத்தை பார்க்கும் போது மீண்டும் குணா படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தி விடுகிறது. மேலும் நேற்று ஒரு தகவல் வெளியானது. குணா குகையில் ஒரே மண்டை ஒடுகளாக இருந்தன என்றும்,

அது குரங்குக் குட்டிகளின் மண்டை ஓடுகள் என்றும் அதைத்தான் ஹேராம் படத்தில் நான் பயன்படுத்தியிருக்கிறேன் என்றும் கமல் கூறிய அந்த செய்தி வைரலானது. இந்த நிலையில் குணா படத்தில் ஹீரோயினாக நடித்த நடிகை ரோஷினி. இவர் ஜோதிகாவின் அக்கா என பல்வேறு வதந்திகள் பரவி வந்தன. ஆனால் ஜோதிகாவின் அக்கா இல்லையாம். ஜோதிகாவின் அக்கா பெயரும் ரோஷினிதான். ஆனால் இவர் இல்லை.

இதையும் படிங்க:மூன்று முறை தள்ளிப்போன அஜித் பட வாய்ப்பு.. இந்த ஸ்கிரிப்ட அவருக்காக பண்ணனும்! செல்வராகவனின் அடுத்த டார்கெட்

குணா படத்தில் நடிக்க நடிகையை தேடிக் கொண்டிருந்த போது கமலின் மனைவி சரிகாதான் ரோஷினியை அழைத்துவந்தாராம். இவர் மராட்டியத்தில் சிறந்து நடிக்க கூடிய நடிகையாம். அதனால் அழைத்துவந்திருக்கிறார். ஆனால் படம் வெளியான பிறகு ரோஷினியை பற்றி பல விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. என்ன நடித்தார் என்றும் ஒரு பொம்மையாகவே படம் முழுக்க இருந்தார் என்றும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

இதன் காரணமாக கமலுக்கும் சரிகாவுக்கும் இடையே பிரச்சினை வந்ததாகவும் சொல்லப்படுகிறது. ஏனெனில் நன்கு நடிக்க கூடிய நடிகையை குணா படத்தில் அவருக்கேற்ப பயன்படுத்தவில்லை என கமல் மீது சரிகா கோபப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் குணா படத்தில் கமலின் டார்ச்சர் காரணமாக இந்த கோலிவுட்டை விட்டே அந்த நடிகை ஓடி விட்டதாகவும் இன்று வரை அவர் எங்கு இருக்கிறார் என்றும் தெரியவில்லை என பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறினார்.

இதையும் படிங்க: யாரும் கூட இல்ல!..இப்படி ஒரு வாழ்க்கை இளையராஜாவுக்கு தேவையா?!.. பகீர் கிளப்பும் கங்கை அமரன்…

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.