அஜித்துக்கு கார் ரேஸ் மீது ஆர்வம் வந்தது இப்படித்தானாம்!. இதுவரை வெளிவராத தகவல்!..

Published on: March 5, 2024
ajith
---Advertisement---

நடிகர் அஜித் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே கார் ரேஸில் அதிக ஆர்வம் உடையவராகவே இருந்தார். அதேபோல், பைக் ஓட்டுவதிலும் அவருக்கு ஆர்வம் அதிகம். கார் மற்றும் மோட்டார் ரேஸில் கலந்து கொள்வதில் அஜித்துக்கு அதிக ஆர்வம் உண்டு. அதனால், கீழே விழுந்து அவரின் முதுகில் சில அறுவை சிகிச்சைகளும் செய்யப்பட்டது.

அமராவதி திரைப்படம் மூலம் சினிமாவில் நுழைந்தார் அஜித். துவக்கத்தில் சாக்லேட் பாயாக பல படங்களிலும் நடித்தார். 90களில் நிறைய காதல் படங்களில் நடித்து விஜய்க்கு டஃப் கொடுத்தார். ஆனால், அமர்க்களம், பில்லா, மங்காத்தா போன்ற ஆக்‌ஷன் படங்கள் மூலம் மாஸ் ஹீரோவாகவும் மாறினார்.

இதையும் படிங்க: வழக்கம் போல பெரியவரு உலறிட்டாரு! ‘கோட்’ படத்தின் முக்கியமான சீக்ரெட்டை அவிழ்த்துவிட்ட கங்கை அமரன்

ரசிகர் மன்றங்களை கலைத்த பின்னரும் இவருக்கு ரசிகர் கூட்டம் என்னவோ குறையவே இல்லை. தான் நடிக்கும் படங்களிலும் கார் அல்லது பைக் ஓட்டும் காட்சி வந்தால் மிகவும் ஆர்வமுடன் நடிப்பார் அஜித். வலிமை படம் பார்த்தவர்களுக்கு அது புரியும். அதேபோல், ‘என்னை அறிந்தால்’ படத்தில் சில காட்சிகளில் அசத்தலாக காரும் ஓட்டியிருப்பார்.

ஒருபக்கம், படப்பிடிப்பிலிருந்து கேப் கிடைத்தால் உடனே பைக்கை எடுத்துக்கொண்டு எங்கேயாவது போய்விடுவார். விடாமுயற்சி படத்தில் நடிப்பதற்கு முன் பைக்கிலேயே உலகை சுற்றி வர திட்டமிட்ட அஜித் பல நாடுகளிலும் பைக்கிலேயே பயணம் செய்தார். இப்போது விடாமுயற்சி படம் முடிந்தபின்னரும் மீண்டும் பைக் பயணத்தை தொடர திட்டமிட்டிருக்கிறார்.

இதையும் படிங்க: அடுத்த ரஜினி இவர் தானாம்… ஆட்டோகிராப் வாங்க வந்தவரை ஹீரோவாக்கிய இயக்குனர் இமயம்!…

அஜித் சி்றுவனாக இருக்கும்போதே சோழாவரத்தில் நடக்கும் கார் ரேஸ்களுக்கு அவரை அவரின் அப்பா அடிக்கடி அழைத்து செல்வாராம். இப்படித்தான் கார் ரேஸ் மீது அஜித்து ஆர்வம் வந்திருக்கிறது. திருமணம் ஆன பின்னரும் அஜித்துக்கு கார் ரேஸின் மீதிருந்த ஆர்வம் குறையவில்லை.

சில வருடங்கள் ஷாலினியும் அவரின் ஆசைக்கு உறுதுணையாக இருந்தார். ஆனால், அஜித்துக்கு அடிக்கடி முதுகுவலி வந்ததால் இனிமேல் கார் ரேஸுக்கு போக வேண்டாம் என ஷாலினி சொல்லிவிட்டார். அதேநேரம், பைக் ஓட்டுவதை மட்டும் அஜித் இப்போது வரை நிறுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.