Cinema History
விக்ரமுடன் அஜித் நடிக்க வேண்டிய படம்!.. மிஸ் ஆனது இதனால்தான்!.. இயக்குனர் சொன்ன சீக்ரெட்!..
தமிழ் சினிமாவில் மிகவும் கஷ்டப்பட்டு முன்னேறியவர் நடிகர் விக்ரம். பல படங்களில் நடித்தும் பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, சில வருடங்கள் மலையாள படங்களில் சுரேஷ் கோபி போன்ற நடிகர்களுக்கு தம்பியாக நடித்து வந்தார். அவர் நடிப்பில் வெளியான தந்து விட்டேன் என்னை, மீரா போன்ற படங்கள் ஃபிளாப் ஆனது.
ஒரு நல்ல வாய்ப்புக்காக காத்திருந்த போதுதான் அவருக்கு சேது படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பாலா இயக்கிய இந்த படம் அவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியதோடு, விக்ரம் ஒரு நல்ல நடிகர் என்கிற இமேஜையும் அவருக்கு பெற்று கொடுத்தது. அதன்பின் தில், தூள், சாமி என அடித்து ஆடினார்.
இதையும் படிங்க: எந்த நடிகரும் செய்யாத விஷயத்தினை யோசித்து செய்த அஜித்… தல எப்போவும் மாஸ் தானுங்கோ!…
தொடர்ந்து 3 ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக மாறினார். காசி, அந்நியன், ஐ போன்ற படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். பிதாமகன் படத்திற்காக தேசிய விருதையும் பெற்றார். இவரை போலவே கஷ்டப்பட்டு மேலே வந்தவர்தான் நடிகர் அஜித்.
அஜித்துக்கு எந்த சினிமா பின்புலமும் கிடையாது. துவக்கத்தில் நிறைய படங்களில் வெறும் சாக்லேட் பாயாகவே நடித்து வந்தார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. அப்போதுதான் ரஜினி படமான பில்லாவை ரீமேக் செய்து நடித்தார். அதேபோல், மங்காத்தா படம் மூலம் இளைஞர்களுக்கு பிடித்த ஹீரோவாகவும் மாறினார்.
இதையும் படிங்க: எவ்வளவோ படம் கைவிட்டு போச்சு.. இந்த ரெண்டு படத்துல மட்டும் நடிச்சிருந்தா? மாஸை லாஸ் செய்த அஜித்
இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய இயக்குனர் விக்ரமன் ‘உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படத்தில் ஒரு சின்ன வேடத்தில் அஜித் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என நினைத்து அவரை சந்தித்து பேசினேன். உடனே நடிக்க சம்மதித்தார். அதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. நான் ‘புதிய மன்னர்கள்’ படத்தை இயக்கியபோது விக்ரமின் நண்பராக அவரை நடிக்க வைக்க நினைத்து அவரிடம் பேசினேன்.
ஆனால், அப்போது முதுகில் அறுவை சிகிச்சை செய்திருந்த அவர் ’இந்த நிலையில் என்னால் உங்கள் படத்தில் நடிக்க முடியாது’ என சொல்லிவிட்டார். அதை மனதில் வைத்தே ‘உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்’ படத்தில் கேட்டபோது உடனே நடிக்க ஒப்புக்கொண்டார். அவர் ஒரு ரியல் ஜென்டில்மேன். மனதில் ஒன்றை வைத்து வார்த்தையில் ஒன்றை பேசமாட்டார். என்ன தோன்றுகிறதோ அதை சொல்வார்’ என விக்ரமன் கூறியிருந்தார்.