ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் நடிக்கப்போவது இந்த நடிகரின் மகனா?!.. இது வேற ரூட்டால்ல இருக்கு!..

Published on: March 6, 2024
---Advertisement---

Jason Sanjay: விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்க இருக்கும் படத்தின் அறிவிப்பு கடந்த வருடம் வெளியானது. அப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில் தற்போது ஒரு பெரிய சர்ப்ரைஸ் தகவலும் இணையத்தில் கசிந்துள்ளது.

இயக்குனர் அப்பாவிடம் சண்டை போட்டு நடிகராக வந்தவர் விஜய். முதலில் போராடினாலும் பின்னர் அவர் தனக்கான இடத்தினை சரியாக பிடித்துக்கொண்டு முன்னேறினார். இன்றைய கோலிவுட் வட்டாரத்தில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருக்கிறார். விரைவில் முழுநீள அரசியலில் இறங்க இருப்பதாக அறிவித்தார்.

இதையும் படிங்க: பராசக்தி வெற்றி பெற அந்த மூவரில் யார் காரணம்?.. சந்தேகமே வேண்டாம் இவர்தான்!..

இதுகுறித்து மேலும் பல சர்ச்சைகள் எழுந்தது. படத்தின் அறிவிப்பு மட்டுமே வெளியான நிலையில் அடுத்தடுத்த அப்டேட் எதுவும் கொடுக்கப்படவில்லை. அதற்கு கதையின் மொத்த ஸ்க்ரிப்டையும் ஜேசன் எழுதி வந்ததால் தான் இந்த தாமதம் எனவும் கிசுகிசுக்கின்றனர். இதை தொடர்ந்து படத்தின் ஹீரோவாக பல முன்னணி நடிகர்களின் பெயர்கள் கிசுகிசுக்கப்பட்டது.

இதையும் படிங்க: யுவன் இல்லனா என்ன? அவருக்கு நான் எவ்வளோ செஞ்சிருக்கேன் தெரியுமா? ஓபனாக பேசிய ஆர்.கே.சுரேஷ்!…

சமீபத்தில் கூட துல்கர் சல்மான் தான் ஹீரோ என ஒரு தகவல்கள் வெளியானது. ஆனால் தற்போது அப்படத்தின் ஹீரோவாக துருவ் விக்ரம் தான் நடிக்க இருப்பதாக ஒரு தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அப்படத்தில் அதிதி சங்கர் நாயகியாக நடிக்க இசையை ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் அமீன் இசையமைக்கலாம் என்கின்றனர். இதை வைத்து பார்க்கும் போது முழுக்க முழுக்க வாரிசு பிரபலங்களை வைத்து இப்படத்தினை உருவாக்கினால் படத்திற்கு நிறைய எதிர்பார்ப்பு கிடைக்கும் என லைகா ஸ்கெட்ச் போட்டு இருப்பதாகவும் கிசுகிசுக்கின்றனர்.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.