Connect with us

Cinema News

அப்பா முதல் சல்மான்கான் வரை… தபுவின் வாழ்க்கையை சிதைத்த ஆண்கள்… வெறுத்துப்போய் செய்த காரியம்!…

Dhabu: நடிகை தபு தமிழில் முன்னணி நடிகையாக இருந்தவர். தடாலடியாக தென்னிந்திய சினிமாவில் இருந்து விலகி பாலிவுட்டுக்குள் சென்றுவிட்டார். முகத்தில் குறையாக கவலை. இழந்த வாழ்க்கை. தபு குறித்து அதிர்ச்சியான தகவலை செய்யாறு ரவி தன்னுடைய பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

இந்தியில் அறிமுகமாகி ஹிட் கொடுத்து வந்த நடிகை தபுவை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தது காதலர் தின திரைப்படம் தான். அப்படத்தில் அப்பாஸ் மற்றும் வினித்துடன் இணைந்து நடித்திருப்பார். பொதுவாக மற்ற நடிகை போல இல்லாமல் தபுவின் முகத்தில் ஒரு இனம் புரியாத கவலை எப்போதும் சூழ்ந்து இருக்கும். அதுவே அவருக்கான பல ரசிகர்களை பெற்று தந்தது.

இதையும் படிங்க: பழைய படங்களில் கெத்து காட்டிய பாடகிகள்… சொல்லி அடித்த கில்லி இவங்கதான்!..

அப்பா பாகிஸ்தானை சேர்ந்த முன்னணி நடிகர். அவர் தபுவிற்கு மூன்று வயது இருக்கும் போது டைவர்ஸ் வாங்கி வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டாராம். ஆனால் செய்து கொண்டு சும்மா இருக்காமல், முன்னே நடந்து போவது அவர்கள் பார்க்கும் போது இரண்டாம் மனைவியை கொஞ்சுவது என வெறுப்பேற்றுவாராம்.

அங்கு இருந்தே தபுவுக்கு திருமணத்தின் மீது அதீத வெறுப்பு வந்ததாம். அதை தொடர்ந்து சினிமாவில் இணைந்து நடித்து கொண்டு இருக்கும் போது தென்னிந்திய மொழிகளிலும் கவனம் செலுத்தி வந்தார். அப்போது நாகர்ஜூனாவுடன் இணைந்து நடித்து வந்தார்.

இதையும் படிங்க: நயன்தாரா மேல இவ்வளவு லவ்வா?!.. பிரதீப் படத்துக்கு வாங்கிய அட்வான்ஸில் விக்கி செய்த வேலை!..

இருவரின் ஜோடி பொறுத்தமும் ஹிட் கொடுக்க விஷயமும் வேறு விதத்தில் வெடித்தது. அதாவது நாகர்ஜூனா, தபுவை மூன்றாம் திருமணம் செய்ய இருக்கிறார் எனக் கிசுகிசுத்தனர். இதனால் கடுப்பான நாகர்ஜூனா மனைவி அமலாவை வைத்துக்கொண்டே செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். தபு என் குடும்ப நண்பர் தான் என பொதுவில் பதிலடி கொடுத்தார்.

இந்த விஷயத்தில் உடைந்த தபு தென்னிந்திய படங்களில் நடிப்பதை நிறுத்தினார். இந்தியில் நடித்து கொண்டு இருந்தார். அந்த சமயத்தில் காட்டு பகுதிகளில் நடந்த ஷூட்டிங்கின் போது சல்மான்கான் உள்ளே அழைத்து சென்றார். யோசிக்காமல் அவர் கூட சென்றார் தபு. ஆனால் சல்மான்கான் அவர் துப்பாக்கியை வைத்து ஒரு மானை சுட்டுவிடுகிறார். பிரச்னை பெரிய அளவில் வெடித்தது. இதில் குற்றவாளியாக தபுவும் இணைக்கப்பட்டார். இதனால் வாய்ப்புகள் குவிந்தது.

பல வருடம் கோர்ட் படியேறினார். சல்மான்கான் கூட உதவிச் செய்யாமல் கூட அஜய் தேவ்கான் ஆதரவு கொடுத்து தபுவை அந்த கேஸில் இருந்து வெளியேற உதவி செய்தார். நடிகர் அஜய் தேவ்கானை தவிர தபுவின் வாழ்க்கையில் வந்த எல்லா ஆண்களுமே பிரச்னையை மட்டுமே கொடுக்க கல்யாணத்தின் மீதான நம்பிக்கையை இழந்து விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மண்டைல ஒரு சரக்கும் இல்ல! நம்பி வந்தவரை இப்படி நடுத்தெருவுல விடலாமா? கௌதம் மேனனை கிழித்த பிரபலம்

Continue Reading

More in Cinema News

To Top