Cinema History
பின்னணி இசையால் வந்த பிரச்சனை!. சிவாஜி பட இயக்குனரை ஒதுக்கி வைத்த எம்.ஜி.ஆர்..
சிவாஜிக்கு மிகவும் அதிகமான படங்களை இயக்கியவர் பி.மாதவன். பட்டிக்காடா பட்டணமா, தங்கப்பதக்கம், ராஜபார்ட் ரங்கதுரை, அன்னை இல்லம், எங்க ஊர் ராஜா, வியட்நாம் வீடு உள்ளிட்ட பல படங்களை சிவாஜியை வைத்து இயக்கி இருக்கிறார். இவர் எம்.ஜி.ஆரை வைத்து இயக்கிய ஒரே படம் தெய்வத்தாய்.
இந்த படத்தை தயாரித்தவர் எம்.ஜி.ஆருக்கு நெருக்கமாக இருந்த ஆர்.எம்.வீரப்பன். அப்போது எம்.ஜி.ஆரின் பெரும்பாலான படங்களை இயக்கி வந்தவர் பா.நீலகண்டன். எனவே, மாதவனை இயக்குனராக போட்டால் அது ஒரு வித்தியாசமான படமாக அமையும் என வீரப்பன் நம்பினார்.
இதையும் படிங்க: கை நழுவிப்போன முதல் ஹீரோ பட வாய்ப்பு!.. ஹீரோவா நடிக்க எம்.ஜி.ஆர் பட்ட பாடு!..
அந்த படம் வளர வளர எம்.ஜி.ஆருக்கு அப்படத்தின் மீது மிகுந்த நம்பிக்கை பிறந்தது. எனவே, ‘இந்த படத்தின் பின்னணி இசை நடக்கும்போது நான் கண்டிப்பாக இருக்க வேண்டும். நான் இல்லாமல் செய்துவிடாதீர்கள்’ என இயக்குனர் மாதவனிடமும், தயாரிப்பாளர் வீரப்பனிடம் சொல்லி இருந்தார் எம்.ஜி.ஆர்.
படம் முடிந்து சில நாட்கள் அப்படி பின்னணி இசை கோர்க்கும் போது அதில் கலந்து கொண்டு தனது ஐடியாக்களை சொன்னார் எம்.ஜி.ஆர். சில நாட்கள் மற்ற படங்களின் படப்பிடிப்பில் கடந்து கொண்டதால் அவரால் அப்படத்தின் பின்னணி இசை நடக்கும் நாட்களில் சரியாக வரமுடியவில்லை. எனவே, பின்னணி இசை வேலைகள் சரியாக நடக்கவில்லை.
இதையும் படிங்க: நடிக்காமல் போன அந்த நாடகம்!.. சிவாஜிக்கு அந்த பெயர் வர காரணமாக இருந்த எம்.ஜி.ஆர்!..
ஒருகட்டத்தில் எம்.ஜி.ஆர் இல்லாமலேயே சில முக்கிய காட்சிகளுக்கு இயக்குனரும், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனும் ஆலோசித்து பின்னணி இசை அமைக்கும் வேலையை முடித்துவிட்டனர். அந்த பணிமுடிந்த பின்னர் அங்கே வந்த எம்.ஜி.ஆர் ‘அந்த காட்சியை போடுங்க.. அது மிகவும் முக்கியமான காட்சி. அதுக்கு எப்படி பின்னணி இசை அமைப்பது என ஆலோசனை செய்வோம்’ என கூறியுள்ளார்.
ஆனால், அந்த காட்சிகளுக்கெல்லாம் பின்னணி இசை அமைக்கும் பணிகள் முடிந்துவிட்டது என அவரிடம் சொல்ல கோபத்தில் பொங்கி எழுந்து மாதவனையும், எம்.எஸ்.விஸ்வநாதனையும் திட்டி தீர்த்துவிட்டார். அவர் அப்படி கோபப்பட்டு அவர்கள் பார்த்ததே இல்லை என சொல்லும் அளவுக்கு கோபத்தில் வெடித்தார். அந்த படம் வெளியாகி ஹிட் அடித்த பின்னரும் பி.மாதவனின் இயக்கத்தில் எம்.ஜி.ஆர் நடிக்காமல் போனதற்கு அந்த சம்பவம் ஒரு முக்கிய காரணமாக இருந்தது.
இதையும் படிங்க: சிவாஜியின் ஆஸ்தான இயக்குனரை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய எம்.ஜி.ஆர்!.. காரணம் இதுதான்!…