Cinema History
இவன வச்சி என்ன பண்ணுவ?!.. கலாய்த்த நடிகை!.. வெறியேத்தி வேலை பார்த்த சிவக்குமார்!..
சினிமாவில் வாய்ப்பு என்பது எல்லா காலத்திலும் கஷ்டமான ஒன்றாகவே இருக்கிறது. 1930 முதல் இப்போது வரை சினிமாவில் அவ்வளவு சுலபமாக நுழைந்து விட முடியாது. சினிமா பின்னணி இருந்தால் அது மிகவும் சுலபம். அதுவும், தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் இவர்களில் யாருடைய வாரிசாக இருந்தால் சுலபமாக நுழைந்துவிடலாம்.
அப்படி இல்லை எனில் பல வருடங்கள் போராட வேண்டும். அப்படி கிடைக்கும் வாய்ப்பை தக்க வைக்க வேண்டும். அதற்கு கடுமையாக உழைக்க வேண்டும். நடிப்பதற்கும், நடனமாடுவதற்கும் பயிற்சி செய்ய வேண்டும். இல்லையேல் சினிமாவில் தாக்குபிடிக்க முடியாது. இப்படி எந்த பின்னணியும் இல்லாமல் சினிமாவுக்கு வந்தவர்தான் சிவக்குமார்.
இதையும் படிங்க: பின்னணி இசையால் வந்த பிரச்சனை!. சிவாஜி பட இயக்குனரை ஒதுக்கி வைத்த எம்.ஜி.ஆர்..
இவர் சினிமாவில் நுழையும்போது எம்.ஜி.ஆர், சிவாஜியும் பெரிய நடிகர்களாக இருந்தார்கள். சிவக்குமார் மிகவும் இளையவராக இருந்தார். எனவே, ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை. கதாநாயகியின் தம்பி, கதாநாயகனின் தம்பி என சின்ன சின்ன வேடங்கள் கிடைத்தது.
அந்த நேரத்தில்தான் அவருக்கு பக்தி படங்கள் கை கொடுத்தது. கந்தன் கருணை உள்ளிட்ட சில படங்களில் முருக கடவுளாக நடிக்கும் வாய்ப்பு சிவக்குமாருக்கு கிடைத்தது. அதுபோன்ற பக்தி படங்களை இயக்குவதில் கை தேர்ந்தவர் ஏ.பி.நாகராஜன். அவர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம்தான் காரைக்கால் அம்மையார்.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் அப்படி கேட்பார்னு எதிர்பார்க்கவே இல்ல!.. அழுதே விட்டேன்.. உருகும் சிவக்குமார்….
இந்த படத்திற்காக ‘தகத்தகத்தகவென ஆடவா’ என்கிற பாடலை கே.பி.சுந்தராம்பாள் பாடியிருந்தார். பாடி முடித்தபின் ‘இந்த பாடலுக்கு நடனமாடுவது யார்?’ என அவர் இயக்குனரிடம் கேட்க அவர் சொன்ன பதில் ஸ்ரீவித்யா. ‘அந்த பொண்ணு சின்ன வயசில் இருந்தே பல மேடைகளிலும் ஆடியிருக்கு. அற்புதமா ஆடிடும். சரி. கூட ஆடப்போற பையன் யாரு?’ என அவர் கேட்க ‘பையன் கோயம்பத்தூரை சேர்ந்தவன்’என நாகராஜன் சொல்ல ‘அவனுக்கு நடனமாட தெரியுமா?’ என சுந்தராம்பாள் கேட்க ‘தெரியாது. ஆனா கத்துக்கிட்டு நல்லா ஆடிடுவான்’ என அவர் சொல்ல ’எனக்கு ஒன்னு புரிஞ்சிப்போச்சி. நான் உயிரோட இருக்குற வரை இந்த பாட்ட நீ படம்பிடிக்க மாட்ட’ என கிண்டலாக சொல்லி இருக்கிறார் சுந்தராம்பாள்.
இதைக்கேட்ட சிவக்குமாருக்கு அவமானமாகி போய் வியர்த்தே விட்டது. இந்த பாடலில் சிறப்பாக நடனமாடி விட வேண்டும் என முடிவெடுத்த அவர் 15 நாட்கள் நடனமாடி ஒத்திகை செய்தார். பயிற்சி முடிந்து அந்த பாடல் படம்பிடிக்கப்பட்ட போது மிகவும் சிறப்பாக ஆடினார் சிவக்குமார். அதைப்பார்த்த சுந்தராம்பாள் மிகவும் ஆச்சர்யப்பட்டு போனாராம். அதோடு ‘எப்படிப்பா இந்த பொண்ணோடு போட்டி போட்டு இவ்வளவு அழகா ஆடுற?’ என அவரிடம் சுந்தராம்பாள் கேட்டபோது சிவக்குமார் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லையாம்.
இதையும் படிங்க: எம்ஜிஆர், சிவாஜி செய்யாத சாதனையை நான் செஞ்சிருக்கேன்.. கர்வத்துடன் கூறிய சிவக்குமார்