அழகி டூ மஞ்சுமெல் பாய்ஸ் வரை! சின்ன கேரக்டரானாலும் நடிப்பில் துவம்சம் செய்யும் ஜார்ஜ் மரியான்

Published on: March 7, 2024
george
---Advertisement---

Actor Goerge Mariyan: படத்தில் ஹீரோ , ஹீரோயின்களை தாண்டி ஒரு சில கேரக்டர்களைத்தான் நம்மால் நியாபகத்தில் வைத்துக் கொள்ள முடியும்.ஒன்று அந்த கேரக்டர் படத்திற்கு முக்கியமானதாக இருக்கும். இல்லை அந்த கேரக்டரில் நடிக்கும் ஆர்ட்டிஸ்ட் நமக்கு பிடித்தவர்களாக இருப்பார்கள். அந்த வகையில் நாம் பார்க்க போகும் இந்த நடிகர் சமீபகாலமாகவே ரசிகர்கள் மத்தியில் அதிகளவு வரவேற்பை பெற்றவராக மாறியிருக்கிறார்.

அதுவும் அந்த கேட்ட இழுத்து மூடுங்கடா என்ற ஒத்த வசனத்தால் ரசிகர்களை விசிலடிக்க வைத்தவர். கைதி திரைப்படத்தில் நெப்போலியன் என்ற கதாபாத்திரத்தில் போலீஸ் ஏட்டாக நடித்திருக்கும் ஜார்ஜ் மரியான்தான் அவர். கைதி திரைப்படம் வருவதற்கு முன்புவரை இவரை நாம் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொண்டிருக்க மாட்டோம். பல படங்களில் சின்ன சின்ன வேடங்களில் காமெடியனாக நடித்துக் கொண்டிருந்தவர்.

இதையும் படிங்க: வசந்தபாலனிடம் கடுப்படித்த அங்காடித் தெரு நடிகர்… அதை சாதகமாக பயன்படுத்தி சாதித்த ஆச்சரியம்!

கைதி திரைப்படம் தான் இவருக்கு ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் ஜார்ஜ் மரியான் கைதி படத்தை போன்று ஒரு சில படங்களில்தான் மனதில் நின்று பேசக் கூடிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் சீரியல் நடிகராகத்தான் தன் கெரியரை ஆரம்பித்திருக்கிறார். பின் அழகி திரைப்படத்தில் தான் முதன் முதலில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார் ஜார்ஜ் மரியான்.

அந்தப் படத்திற்கு பிறகு தொடர்ந்து பல படங்களில் ஒரு துணை நடிகர் அளவில்தான் நடித்திருப்பார். இருந்தாலும் மதராசப்பட்டினம் படத்தில் முக்கால் வாசி காட்சிகளில் ஜார்ஜ் மரியானை நாம் பார்க்க முடியும். அதே போல் கலகலப்பு படத்திலும் போலீஸாக வந்து சுவரில் இருக்கும் ஒரு கம்பில் தொங்குவது போன்ற சீனில் நடித்து மக்கள் நெஞ்சங்களை வென்றார்.

இதையும் படிங்க: என் பாட்டை யூஸ் பண்றீங்களே ஆண்மை இருக்கா?!.. கத்திய இளையராஜா!. மஞ்சும்மெல் பாய்ஸ் என்னாக போகுதோ!..

மேலும் பிகில், அண்ணாத்த, சைவம்,சொல்லமறந்த கதை, சண்டக்கோழி, ஜே ஜே போன்ற பல படங்களில் நடித்த ஜார்ஜ் மரியானை சரியான அடையாளம் கண்ட படமாக கைதி திரைப்படம் அமைந்தது. இதனை அடுத்து லியோவிலும் எல்சியூவில் வந்த ஜார்ஜ் மரியானை அப்போதும் ரசிகர்கள் தூக்கி வைத்துக் கொண்டாடினார்கள். அதனால் தமிழக ரசிகர்கள் மத்தியில் ஜார்ஜ் மரியானுக்கு ஒரு தனி மரியாதையே இருக்கிறது.

மலையாளத்திலும் அதே ஒரு மரியாதையை ஜார்ஜ் மரியான் பெற்று விடுவார் என்றுதான் தோன்றுகிறது. சமீபத்தில் ரிலீஸான மஞ்சுமெல் பாய்ஸ் படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த ஜார்ஜ் மரியானை மலையாள ரசிகர்களும் கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள்.

இதையும் படிங்க: கட் பனியனில் கண்டதையும் காட்டும் சீரியல் நடிகை!.. இதுக்கு மேல தாங்காது செல்லம்!..

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.