
Cinema News
மருத்துவமனையில் அஜித்!.. கேன்சல் ஆன துபாய் பைக் டூர்!.. என்னப்பா நடக்குது?!..
Published on
By
இன்று காலை திடீரென அஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி அவரின் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அஜித்துக்கு ஏற்கனவே முதுகு தண்டில் பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டிருக்கிறது. இதனால்தான் இவரின் உடல் எடை போட்டு கொண்டே இருக்கும்.
உணவு கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியால் மட்டுமே அதை தடுக்க முடியும். சில சமயம் அஜித் அதை கடைபிடிக்க முடியாததால்தான் முகம் கொஞ்சம் உப்பி அவரின் முகமே மாறிவிடும். வலிமை படத்தில் அவரின் தோற்றம் அப்படி இருந்ததற்கு காரணமும் அதுதான்.
இதையும் படிங்க: சூப்பர்ஹிட் பாடலுக்கு நோ சொன்ன இயக்குனர்… விடாப்பிடியாக இருந்து சாதித்த ரஜினிகாந்த்…
எனவே, வழக்கமான மருத்துவமனை பரிசோதனைக்காகத்தான் அவர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டது. அஜித் இப்போது விடாமுயற்சி படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 3 மாதங்களாக அஜர்பைசான் நாட்டில் நடந்தது.
ஆனால், பனிப்பொழிவு, லைக்காவுக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடி என பல காரணங்களால் படப்பிடிப்பு தடைபட்டுக்கொண்டே வந்தது. இப்போது படப்பிடிப்பு முழுமையாக நிறுத்தப்பட்டு விட்டது. லைக்கா இப்போது ரஜினியை வைத்து வேட்டையன் படத்தை தயாரித்து வருகிறது. எனவே, ஒரே நேரத்தில் 2 பெரிய படங்களை தயாரிக்க முடியாத நிலையில் லைக்கா இருக்கிறது.
இதையும் படிங்க: எத்தனை ஹீரோக்கள் நடிக்க வேண்டிய படம் தெரியுமா? ஆனால் சொன்ன காரணம்.. அதான் லேடி சூப்பர் ஸ்டார்
எனவே, எப்படியும் விடாமுயற்சி படப்பிடிப்பு துவங்க இன்னும் 2 மாதங்கள் ஆகும் என கணக்குப்போட்ட அஜித் மீண்டும் தனது பைக் டூரை துவங்க திட்டமிட்டு துபாயில் அதற்கான ஏற்பாடுகளை செய்ய சொல்லிவிட்டாராம். ஆனால், திடீரென உடல் அசவுகர்யமாக ஆனதை உணர்ந்த அஜித் அப்போலோ மருத்துவமனையில் அட்மிட் ஆகிவிட்டார்.
அங்கு அவருக்கு இதயம் தொடர்பான பரிசோதனைகள் செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது. இன்று ஒருநாள் அவர் மருத்துவமனையிலேயே இருப்பார் எனவும் செய்திகள் கசிந்துள்ளது.
Bison: மாரிசெல்வராஜ் இயக்கத்தில் அடுத்து வரப் போகும் திரைப்படம் பைசன். துருவ் விக்ரம் நடிப்பில் இந்தப் படம் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கின்றன....
Bison: நடிகர் விக்ரமின் மகனும் நடிகருமான துருவ் விக்ரம் நடிப்பில் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் பைசன். இந்த படம் அக்டோபர்...
Simbu-Dhanush: தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், அஜித் வரிசையில் அடுத்த இரட்டை போட்டியாளர்களாக பார்க்கப்பட்டவர்கள் சிம்புவும் தனுஷும். சிம்பு குழந்தை...
SMS: கடந்த 2009 ஆம் ஆண்டு ராஜேஷ் இயக்கத்தில் வெளியான திரைப்படம்தான் சிவா மனசுல சக்தி. இந்தப் படத்தில் ஜீவா நாயகனாக...
கோமாளி படம் மூலம் இயக்குனராக களமிறங்கி முதல் படத்திலேயே ஹிட் கொடுத்தவர் பிரதீப் ரங்கநாதன். அந்த படத்தின் இறுதியில் ஒரு காட்சியில்...