Cinema News
மகேஷ்பாபுவுக்கு ராஜமவுலி போட்ட கறார் கண்டிஷன்!.. கொஞ்சம் ஓவராத்தான் போறாரு!..
ஈ படம் வந்தபோதே ராஜமவுலி எல்லோராலும் ஆச்சர்யமாக பார்க்கப்பட்டார். ஏனெனில் ஒரு ஈ-யை வைத்து ஒரு கதையை எப்படி உருவாக்க முடியும் என பல இயக்குனர்களே யோசித்தனர். ஆனால், தனது திரைக்கதை மூலம் ஹிட் கொடுத்தார் ராஜமவுலி. பாகுபலி படம் வந்த போது அவரின் ரேஞ்ச் எங்கேயோ போனது.
எம்.ஜி.ஆர் காலத்து அடிமைப்பெண் கதை என்றாலும் பாகுபலி படம் ஒரு விஸ்வல் டிரீட்டாக இருந்தது. அதில் இடம் பெற்றிருந்த கிராபிக்ஸ் காட்சிகள் ரசிகர்களை பிரம்மிக்க வைத்தது. பாகுபலி 2 திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் வசூலில் சக்கை போடு போட்டது.
இதையும் படிங்க: உங்களுக்கு வெட்கமா இல்லையா? ராதிகாவை திட்டிய தனுஷ்… என்னங்க இப்படி கேட்டுட்டீங்க!
பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்களால் இந்திய அளவில் ராஜமவுலி பிரபலமாகி போனார். அடுத்து ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரணை வைத்து ஆர்.ஆர்.ஆர் படத்தை இயக்கினார். பிரம்மாண்ட செலவில் உருவான இந்த படமும் 3 மொழிகளிலும் சூப்பர் ஹிட் அடித்து வசூலை அள்ளியது.
எனவே, தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என அனைத்து மொழியில் உள்ள பெரிய நடிகர்களும் ராஜமவுலியின் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படுகின்றனர். அதேநேரம், அவர் இயக்கத்தில் நடிக்கபோனால் 2 வருடங்கள் வேறு எந்த படத்திலும் நடிக்க முடியாது. அதனால்தான் விஜய், ரஜினி போன்ற நடிகர்கள் யோசிக்கிறார்கள்.
இதையும் படிங்க: மருத்துவமனையில் அஜித்!.. கேன்சல் ஆன துபாய் பைக் டூர்!.. என்னப்பா நடக்குது?!..
அடுத்து தெலுங்கு சினிமா உலகின் இளவரசர் மகேஷ்பாபுவை இயக்கப்போகிறார் ராஜமவுலி. சமீபத்தில் வெளியான குண்டூர் காரம் பெரிய வெற்றியை பெறாத நிலையில் ராஜமவுலி படத்தில் நடிக்கவிருக்கிறார் மகேஷ்பாபு. இந்நிலையில், இந்த படம் முடியும் வரை கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு ஊடகங்கள் மற்றும் செய்தியாளர்களையே சந்திக்கக் கூடாது என சொல்லி விட்டாராம் ராஜமவுலி.
பாகுபலி படம் உருவான போது இப்படித்தான். பிரபாஸ் பெரும்பலான நிகழ்ச்சிகளை தவிர்த்து வந்தார். மேலும் பாகுபலி மற்றும் பாகுபலி 2 இரண்டு படங்களுக்காக கிட்டத்தட்ட 4 வருடங்கள் நடித்து கொடுத்தார். அதுதான் அவரை பேன் இண்டியா ஹீரோவாக மாற்றி இருக்கிறது. தற்போது அந்த லிஸ்ட்டில் மகேஷ்பாபுவும் சேருவாரா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.