ஏய் சூரி சூப்பரப்பு!.. ஸ்கூல் பசங்கள பார்த்து அப்படியொரு வார்த்தை.. மாணவர்கள் முகமெல்லாம் சந்தோஷம்!

Published on: March 7, 2024
---Advertisement---

கடலூரில் படப்பிடிப்பை முடித்துவிட்டு நடிகர் சூரி காரில் வந்து கொண்டிருந்த போது பள்ளி மாணவர்கள் அவரை அடையாளம் கண்டு சூழ்ந்து கொண்டனர். கார் கண்ணாடியை இறக்கி மாணவர்களைப் பார்த்து கை அசைத்தபடியே நடிகர் சூரி சொன்ன வார்த்தை ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

காமெடி நடிகராக இருந்து கதையின் நாயகனாக மாறியுள்ள சூரி விடுதலை படத்தை தொடர்ந்து ஏழு கடல் ஏழு மலை, கொட்டுக்காளி, விடுதலை 2 மற்றும் கருடன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: மகேஷ்பாபுவுக்கு ராஜமவுலி போட்ட கறார் கண்டிஷன்!.. கொஞ்சம் ஓவராத்தான் போறாரு!..

சமீபத்தில், நடிகர் சூரி நடித்த படங்கள் வெளிநாடுகளில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று கைதட்டல்களை அள்ளினார்.

பெர்லின் நாட்டு ரசிகைகள் சூரியன் பெயரை சொல்லி அவரை பாராட்டும் போது தமிழ் சினிமா ரசிகர்கள் தலைநிமிர்ந்து சூரிக்கு வாழ்த்துக்களை சொல்லி வந்தனர். கருடன் படத்தில் சசிகுமாரை விட சூரியன் சம்பளம் அதிகம் இந்த தகவல் வெளியான நிலையில், ரசிகர்கள் பெரும் ஆச்சரியத்துடன் அவரது வளர்ச்சியை கண்டு மெய் சிலிர்த்தனர்.

இதையும் படிங்க:  உங்களுக்கு வெட்கமா இல்லையா? ராதிகாவை திட்டிய தனுஷ்… என்னங்க இப்படி கேட்டுட்டீங்க!

இந்த நிலையில் கடலூரிலிருந்து நடிகர் சூரி தனது காரில் வந்து கொண்டிருந்தபோது பள்ளியை முடித்துவிட்டு வெளியே வந்த மாணவர்கள் சூரியை பார்த்து கை அசைத்தனர். நடிகர் சூரி தனது கார் கண்ணாடியை இறக்கி மாணவர்களுக்கு கை கொடுத்து டேய் தம்பிகளா எல்லாம் நல்லா படிங்கடா.. நீங்கதான் படிச்சு பெரிய ஆளா வந்து அண்ணனுக்கு ஆட்டோகிராப் போடணும்டா என அவர் பேசிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.