சொங்கிப் பாப்பாவான சமந்தா!.. என்ன டிரெஸ் போட்டாலும்!.. மூஞ்சு டல்லடிக்குதே ஏம்மா?..

Published on: March 7, 2024
---Advertisement---

மனசுல பெரிய வொண்டர் உமன் கால் கடோட் என நினைப்பு என சமந்தாவின் லேட்டஸ்ட்  புகைப்படங்களை பார்த்து நெட்டிசன்கள் கண்ட மேனிக்கு கமெண்ட் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

சமந்தாவின் ரசிகர்கள் ஓ பேபி எவ்ளோ ஸ்லிம்மாகிட்டீங்க லுக் தூக்குதே என வழக்கம் போல ஜொள்ளு விட்டு வருகின்றனர். சமீபத்தில், சமந்தா டூ பீஸ் உடையில் கவர்ச்சிகரமாக காட்டியதற்கு ஒரு வழியாக அவருக்கு அட்டை படத்தில் நடிக்க வாய்ப்பு வந்து விட்டதா என ஏகப்பட்ட ட்ரோல்களும் குவிந்து வருகின்றன.  ஃபெமினா எனும் ஃபேஷன் மேகஸினில் நடிகை சமந்தாவின் கவர்ச்சிகரமான போட்டோக்களை வெளியிட்டுள்ளனர்.

 

இதையும் படிங்க: நீ தங்குவியாடா இந்த வீட்ல! விஜய்க்கு எதிராக கிளம்பிய சூர்யா ரசிகர்!.. இன்னொருத்தர் சொன்னதுதான் தரம்!

கடந்த ஆண்டு சமந்தா நடிப்பில் வெளியான சாகுந்தலம் மற்றும் குஷி உள்ளிட்ட இரு படங்களுமே பெரிதாக ஹிட் அடிக்கவில்லை. சாகுந்தலம் படுதோல்வியை சந்தித்த நிலையில், குஷி படம் 50 கோடி அளவுக்கு வசூல் ஈட்டி சுமாரான வெற்றியை பெற்றது.

குஷி படம் வெளியாகி கிட்டத்தட்ட 1 வருடம் ஆகவுள்ள நிலையில், இன்னமும் நடிகை சமந்தா எந்தவொரு புதிய படத்திலும் ஒப்பந்தமாகவில்லை. தொடர்ந்து கிளாமர் போட்டோக்களை மட்டுமே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

இதையும் படிங்க: ஏய் சூரி சூப்பரப்பு!.. ஸ்கூல் பசங்கள பார்த்து அப்படியொரு வார்த்தை.. மாணவர்கள் முகமெல்லாம் சந்தோஷம்!

கிடைக்கும் விளம்பரங்களில் முடிந்த வரை பெரிய சம்பளமாக பேசி நடித்து வருகிறார் என்கின்றனர். தங்க நிற கப் வச்ச டாப்ஸ் போட்டுக் கொண்டு வொண்டர் உமன் போலவும், வித விதமாக ஹாலிவுட் நடிகைகள் அணியும் அட்டகாசமான உடைகளை அணிந்து கொண்டும் சமந்தா போஸ் கொடுத்துள்ளார்.

சிட்டாடல் வெப்சீரிஸ் சீக்கிரம் ரிலீஸ் ஆனால் தான் அடுத்தடுத்து சமந்தாவுக்கு பட வாய்ப்புகள் கிடைக்கும் என்கின்றனர். ஆனால், என்ன தான் கவர்ச்சியாக டிரெஸ்  போட்டாலும் சமந்தாவின் முகத்தில் பழைய பொலிவு இல்லை என்றே பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.