Connect with us

Cinema News

படுத்தேவிட்டானய்யா!.. இனிமே அஜித்தை நம்பி பிரயோஜனம் இல்லை.. லைகாவுல நீங்களும் படம் பண்ணலாமாம்!..

தொடர்ந்து லைகா தயாரிப்பில் வெளியாகும் படங்கள் எல்லாம் தோல்வியை தழுவி வரும் நிலையில், முன்னணி இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் மீது உள்ள நம்பிக்கையே போய் விட்டதா என்னவென்று தெரியவில்லை.

குறைந்த பட்ஜெட்டில் 5 புதிய படங்களை தயாரிக்கும் முடிவுக்கு லைகா நிறுவனம் வந்திருக்கிறது. மேலும், பல இளைஞர்களை உற்சாகப்படுத்தி நாளை இயக்குநர் போல ஒரு Frame to Fame எனும் குறும்பட போட்டியை நடத்தப் போகிறது.

இதையும் படிங்க: நீ தங்குவியாடா இந்த வீட்ல! விஜய்க்கு எதிராக கிளம்பிய சூர்யா ரசிகர்!.. இன்னொருத்தர் சொன்னதுதான் தரம்!

மார்ச் 7ம் தேதி முதல் மார்ச் 27ம் தேதி 10 நிமிடம் முதல் 20 நிமிடங்கள் வரையிலான குறும்படத்தை லைகா நிறுவனம் கொடுத்துள்ள வெப்சைட்டில் போட்டியாளர்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும். 18 வயதை நிரம்பியவர்கள் மட்டுமே இந்த குறும்பட போட்டியில் பங்கேற்க முடியும்.

மொத்தம் 50 குறும்படங்களை தேர்வு செய்து தங்கள் யூடியூப் சேனலில் வெளியிடப் போவதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், அதில் தேர்ந்தெடுக்கப்படும் 5 வெற்றியாளர்கள் புதிதாக லைகா தயாரிப்பில் படமே இயக்கும் வாய்ப்பு கிடைக்கும் எனக் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க: இவ்வளவு தள்ளுபடியா?!.. மொத்தமா அள்ளிக்கிட்டு போயிடலாம்!.. சத்யா ஆயிஷா செய்த ஷாப்பிங் வீடியோ..

இந்த அறிய வாய்ப்பை நல்ல திறமையான உதவி இயக்குநர்கள் மற்றும் சினிமாவில் இயக்குநராகும் கனவுடன் இருப்பவர்கள் தவற விட்டு விட வேண்டாம். ஆனால், திடீரென லைகா நிறுவனம் இப்படி வரக் காரணமே பெரிய பட்ஜெட்டில் லைகா தயாரிப்பில் வெளியான படங்கள் சொதப்பியது தான் என்கின்றனர்.

சமீபத்தில், ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு வாய்ப்புக் கொடுத்து லால் சலாம் படம் நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டது. அடுத்து லைகா தயாரிப்பில் நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் படம் இயக்கப் போகிறார். இந்நிலையில், வாரிசுகளுக்கு மட்டுமின்றி திறமையானவர்களுக்கும் வாய்ப்பு வழங்கவும் அதன் மூலம் கல்லா கட்டவும் லைகா திட்டமிட்டுள்ளது என்கின்றனர்.

google news
Continue Reading

More in Cinema News

To Top