Connect with us
vadivelu

Cinema News

வடிவேலுவிடம் பேக்கரி கதையை கேட்கும் நபராக நடித்தவர் யார் தெரியுமா?!.. ஒரு ஆச்சர்ய தகவல்!

வடிவேலு பல படங்களில் நடித்திருந்தாலும் அதில் சில நகைச்சுவை காட்சிகள் காலத்தால் மறக்க முடியாதவை. எப்போது நினைத்தாலும் சிரிப்பை வரவழைக்கும் காமெடிகள் பல உண்டு. வின்னர் படத்தில் கைப்புள்ளையாக நடித்த காமெடி காட்சிகள் வடிவேலுவின் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று.

அதேபோல், பிரண்ட்ஸ் படத்தில் காண்ட்ராக்டர் நேசமணியாக வந்து அவர் செய்த அட்டகாசம் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. அதேபோல், 6 மணிக்கு மேல் சரக்கு போட்டுவிட்டு அம்மா, அப்பாவை துவம்சம் செய்யும் காமெடியும் ரசிகர்களால் மறக்க முடியாத ஒன்றாகும்.

இதையும் படிங்க: மன உளைச்சலில் இருந்த அஜித்! அதனால் வந்த பாதிப்புதான் இது.. அஜித்தின் உடல்நலம் பற்றி கூறிய நலம்விரும்பி

மேலும், மருதமலை படத்தில் என்கவுண்டர் ஏகாம்பரமாக வந்து லஞ்சம் வாங்கும் போலீஸ் அதிகாரியாக சிரிக்க வைத்தார். இப்படி வடிவேலுவின் மறக்க முடியாத காமெடி காட்சிகள் நிறைய இருக்கிறது. இதில் முக்கியானது சுந்தர் சி இயக்கத்தில் உருவான கிரி படத்தில் வீரபாபுவாக வந்து வடிவேல் செய்த அலப்பறை சொல்லி மாளாது.

இந்த படத்தில் வடிவேலுவின் பேக்கரியில் அர்ஜூன் வேலை செய்வார். ஒரு நாள் அவரை அழைத்து தனது அக்காவை வைத்து பேக்கரி வாங்கிய கதையை அர்ஜூனிடம் சொல்வார் வடிவேலு. அன்று இரவு வடிவேலுவின் அருகிலேயே அர்ஜூன் படுத்து தூங்குவது போல காட்சி அமைக்கப்பட்டிருக்கும்

ஆனால், அதிகாலை நேரத்தில் ‘வீரபாபு வீரபாபு’ என ஒருவர் அழைப்பார். ‘பேக்கரியை டெவலப் பண்ணதும் பண்ணு வேணும். வெண்ணெய் வேணும்னு டார்ச்சர் பண்றானுங்க’ என சொல்லிகொண்டே கதவை திறப்பார். அங்கே பல் விலக்கிய படியே நிற்கும் ஒருவர் ‘ஏம்ப்பா நீ உங்க அக்காவை வச்சிதான் இந்த பேக்கரியை வாங்கினியாமே உண்மையா?’ என கேட்பார்.

comedy

இந்த விஷயம் எப்படி லீக் ஆச்சி?’ என வடிவேலு முழிப்பார். அந்த நபரோ ‘ஏ சீக்கிரம் சொல்லுப்பா. வேலை இருக்கு’ என்பார். கடுப்பான வடிவேலு ‘வேலையை விட்டு வந்து விசாரிக்கிற விஷயமா இது?.. போயா’ என அவரை திட்டுவார். ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த காமெடி காட்சி இது.

இப்படி ஒரு காட்சியை சுந்தர் சி எடுக்க நினைத்ததும் யாரை வைத்து எடுப்பது என தெரியவில்லை.  அந்த படத்தில் தேவயாணியின் மகனாக நடித்த சிறுவனின் தந்தையையே அந்த வேடத்தில் நடிக்க வைத்து காட்சியை எடுத்தாராம் சுந்தர் சி.

இதையும் படிங்க: இரண்டு பெயரை கொடுத்த சிவாஜி ராவ்… மறுத்த கே.பாலசந்தர்.. ரஜினிகாந்த் உருவானதன் பின்னணி?

Continue Reading

More in Cinema News

To Top