நயனுக்கு டைவர்ஸெல்லாம் இல்ல…அந்த போஸ்டுக்கு பின்னால் வேற விஷயம் இருக்கு.. அனத்தாம இருங்கப்பா!

Published on: March 8, 2024
---Advertisement---

Nayanthara: பார்த்து பார்த்து காதலித்து கோலாகலமாக திருமணம் செய்து கொண்டார் நடிகை நயன்தாரா. ஆனால் திடீரென கணவன், மனைவிக்கு இடையில் விரிசல் ஏற்பட்டு பிரிந்துவிட்டதாக தகவல்கள் கசிந்து வரும் நிலையில் அதுகுறித்து சில முக்கிய தகவல்களும் வெளியாகி இருக்கிறது.

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பல வருடமாக காதலித்து வந்தவர்கள். சில வருடம் முன்பு பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். அதை தொடர்ந்து இரட்டை ஆண் குழந்தைகளுக்கு வாடகை தாய்முறையில் பெற்றோர்களாகவும் மாறினர்.

இதையும் படிங்க: இரண்டு பெயரை கொடுத்த சிவாஜி ராவ்… மறுத்த கே.பாலசந்தர்.. ரஜினிகாந்த் உருவானதன் பின்னணி?

இதனால் நயனின் மார்க்கெட் பெரிய சரிவை சந்தித்தது. திரைப்படங்களில் கவனம் செலுத்துவதை குறைத்துக்கொண்டு மேக்கப் சாதனங்கள் முதல் நாப்கின் வரை என பல பிசினஸை நயன் தொடங்கினார். இதைத் தொடர்ந்து அதன் ப்ரோமோஷன்கள் நடந்து வருகிறது. மேலும் இன்ஸ்டாவிலும் எண்ட்ரி கொடுத்தார்.

இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டால் பக்கத்தில் நயன் ஐ அம் லாஸ்ட்  என பதிவிட்டிருந்தார். அதை வேளையில் திடீரென அவரது கணக்கிலிருந்து விக்னேஷ் சிவனை பாலோ செய்திருந்தது மிகப்பெரிய சர்ச்சையானது. இது குறித்து பிரபல திரை விமர்சகர் அந்தணன் சில விஷயங்களை குறிப்பிட்டு இருக்கிறார்.

இதையும் படிங்க: மன உளைச்சலில் இருந்த அஜித்! அதனால் வந்த பாதிப்புதான் இது.. அஜித்தின் உடல்நலம் பற்றி கூறிய நலம்விரும்பி

அதில், நயன் அந்தப் பதிவில் குறிப்பிட்டது விக்னேஷ் சிவனை அல்ல. தற்போது நயன் துபாயில் இருக்கிறார். அங்கு அவருக்கு விருது ஒன்று தரப்பட இருந்தது. சில காரணங்களால் நயன் அதை தவற விட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இதற்காகவே அந்த போஸ்ட்டை போட்டு இருக்கலாம்.

தற்போது நயன்தாராவிற்கு விக்னேஷ் சிவன் தான் எல்லாமுமாக இருக்கிறார். சமீப காலங்களில் அவர்கள் வாங்கிய பல கோடி ரூபாய் மதிப்புள்ள பல சொத்துக்கள் இருவர் பெயரில் தான் வாங்கப்பட்டிருக்கிறது. அதனால் நயன்தாரா விக்னேஷ் சிவனிடம் இருந்து கண்டிப்பாக டைவர்ஸ் எல்லாம் வாங்கவே மாட்டார் எனவும் தெரிவித்து இருக்கிறார்.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.