Cinema News
ரஜினியின் புகழை சொன்ன வைரமுத்துவின் பாடல்கள்! இந்த பாடல்கள் மட்டும் இல்லைனா தலைவரின் நிலைமை?
தமிழ் சினிமா உலகில் சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். அந்தக் காலத்தில் இருந்தே எம்ஜிஆர் சிவாஜி இவர்களின் படங்களை எடுத்துக் கொண்டால் ஒரு பாடலாவது சமூகத்திற்கான பாடலாக அவர்கள் தங்கள் கருத்துக்களை எடுத்துச் சொல்லும் விதமாக அமைந்திருக்கும்.
அதே வழியில் தான் ரஜினியும் ரஜினியை பின்பற்றி விஜய்யும் தங்கள் பாடல்கள் மூலம் மக்களுக்கு என்ன சொல்ல வருகிறோம் என்பதை கூறி வருகிறார்கள். அந்த வகையில் ரஜினிகாந்துக்கு அவருடைய பாடல்கள் மூலம் ஆழமான கருத்துக்களை அழகான கவிதைகள் வடிவில் கொடுத்தவர் வைரமுத்து.
இதையும் படிங்க: நயனுக்கு டைவர்ஸெல்லாம் இல்ல…அந்த போஸ்டுக்கு பின்னால் வேற விஷயம் இருக்கு.. அனத்தாம இருங்கப்பா!
ரஜினிகாந்த் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தையும் அவருடைய சினிமா தெரியரில் ஒரு ஏற்றத்தையும் தந்ததில் வைரமுத்துவின் பங்கு மிகப் பெரியது. ஏனெனில் ரஜினிகாந்த் சினிமா வாழ்க்கையில் மிகவும் திருப்புமுனையாக அமைந்த படங்களான அண்ணாமலை, பாட்ஷா, முத்து, எந்திரன், படையப்பா, சிவாஜி ஆகிய எல்லா படங்களிலும் வைரமுத்துவின் பங்கு அதிகமாகவே இருந்தது.
ரஜினிக்காக எழுதுகின்ற வைரமுத்துவின் எல்லா பாடல்களும் ரஜினிக்காகவே பொருந்தும் வகையில் அந்தப் பாடல்கள் இடம் பெற்றிருக்கும். இதைப் பற்றி வைரமுத்து குறிப்பிடும் போது ‘சமூகத்துக்கும் ரஜினிக்கும் நெருக்கம் அதிகமாகும் போது அவர் சூப்பர் ஸ்டார் ஆனார்’.
இதையும் படிங்க: வடிவேலுவிடம் பேக்கரி கதையை கேட்கும் நபராக நடித்தவர் யார் தெரியுமா?!.. ஒரு ஆச்சர்ய தகவல்!
அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் என்னுடைய பாடல்கள் சமூகம் ரஜினியை பற்றி என்ன நினைக்கிறதோ அதை என் பாடல் வரிகளில் இணைத்துக் கொண்டேன். இதன்மூலம் சமூகத்தின் கருத்தும் பாடலாசிரியரின் கருத்தும் ஒன்றி போனதால் அது ரஜினிக்கு பொருந்தி போனது என்று குறிப்பிட்டு இருக்கிறார் வைரமுத்து.
என்னுடைய எழுத்துக்களால் சூப்பர் ஸ்டார் ஆகவில்லை ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிம்பத்தை என் தமிழ் கட்டிக் காத்தது. ரஜினிகாந்தின் உயரம் மிகப்பெரியது. அந்த உயரம் எவ்வளவு என்பதை என் தமிழ் எடுத்துச் சொன்னது.அவ்வளவுதான் என வைரமுத்து ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க: மன உளைச்சலில் இருந்த அஜித்! அதனால் வந்த பாதிப்புதான் இது.. அஜித்தின் உடல்நலம் பற்றி கூறிய நலம்விரும்பி