ஒரு பாட்டுக்கு 30 கோடி!.. இந்தியன் 2 என்ன ஆகப்போகுதோ!.. இதுக்கே எண்டே இல்லையா?!…

Published on: March 8, 2024
shankar
---Advertisement---

தமிழ் சினிமாவில் ஜென்டில்மேன் என்கிற படம் மூலம் இயக்குனராக மாறியவர் ஷங்கர். முதல் படமே அதிக பட்ஜெட்டில் உருவானதால் தொடர்ந்து அதுவே அவரின் ஸ்டைலாக மாறியது. அதற்கு காரணம் அப்போது பெரிய தயாரிப்பாளராக இருந்த குஞ்சுமோன்தான். அவர்தான் ஜென்டில்மேன் படத்தின் தயாரிப்பாளர்.

அடுத்தும் அவரின் தயாரிப்பில் காதலன் படத்தை இயக்கினார் ஷங்கர். அதன்பின் ஜீன்ஸ், இந்தியன் என அடித்து ஆடினார் ஷங்கர். தமிழ் சினிமாவில் அதிக செலவில் படமெடுக்கும் இயக்குனராக மாறிப்போனார் ஷங்கர். அவர் இயக்கத்தில் வெளிவந்த இந்தியன், முதல்வன், அந்நியன், பாய்ஸ், எந்திரன், 2.0, ஐ என எல்லா படங்களுமே அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டவைதான்.

இதையும் படிங்க: அப்படி அவர் என்ன பண்ணாரு?!.. ராதாரவி ரிட்டயர்ட் ஆகுறது நல்லது!.. கிழித்தெடுத்த ஸ்ரீலேகா!..

இப்போது கமல்ஹாசானை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார். அதேபோல், தெலுங்கில் ராம் சரணை வைத்து கேம் சேஞ்சர் என்கிற படத்தையும் ஷங்கர் இயக்கி வருகிறார். இந்த இரண்டு படங்களும் துவங்கப்பட்டு 3 வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. ஆனால், படமோ முடிந்த பாடில்லை.

ஆர்.ஆர்.ஆர் படத்திற்கு பின் ராம்சரணின் படம் இதுவரை வெளியாகவில்லை. இந்தியன் 2 படமோ இழுத்துக்கொண்டே போகிறது., ஒருவழியாக காட்சிகளை எடுத்துமுடித்துவிட்ட நிலையில் ஒரு பாடல் காட்சி மட்டும் எடுக்க வேண்டியிருந்ததாக சொல்லப்பட்டது. சித்தார்த் நடனமாடும் அந்த பாடல் காட்சிகள் தற்போது எடுக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: நண்பனுக்கு ஒன்னுனா ஓடி வரும் தளபதி.. அஜித்தை நலம் விசாரிக்க வரும் விஜய்

அதோடு இந்தியன் 2 படம் முடிந்துவிட்டதா என்றால் அதுதான் இல்லை. இன்னும் ஒரு பாடல் காட்சி மீதம் இருக்கிறதாம். அது கமலுக்கான பாடல் என சொல்லப்படுகிறது. இந்த பாட்டை ரூ.30 கோடி செலவில் எடுக்கவேண்டும் என சொல்லி லைக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் ஷங்கர்.

ஏற்கனவே நிதிநெருக்கடியில் இருக்கும் லைக்கா விடாமுயற்சி படப்பிடிப்பையே நிறுத்திவிட்டது. இந்நிலையில், இந்தியன் 2-வில் ஒரு பாடலுக்கு 30 கோடியெல்லாம் செலவழிப்பார்களா என்பது தெரியவில்லை. அதேநேரம், உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனமும் இப்படத்தை இணைந்து தயாரிப்பதால் அவர்கள் கூட இதற்கு பணம் கொடுக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.