
Cinema News
மஞ்சும்மெல் பாய்ஸ் இயக்குனர் மீது Metoo புகாரளித்த நடிகை.. பிரபலம் ஆகிட்டாலே பிரச்னை தானா?…
Published on
By
Manjummel Boys: கேரளா சினிமாவையே புரட்டி போட்ட படம் என்ற அடையாளத்துடன் இருக்கும் மஞ்சும்மெல் பாய்ஸ் திரைப்படத்தின் இயக்குனர் சிதம்பரத்தின் மீது அவரின் முதல் பட நடிகை மி டூ புகாரை இணையத்தில் சொல்லி இருப்பது சர்ச்சையாகி இருக்கிறது.
மலையாள சினிமா ஹிட் அடித்தால் அதற்கு முதல் காரணம் தமிழ் ரசிகர்களாக தான் இருக்கும். அந்த வகையில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான குணா படத்தில் இடம்பெற்ற குகையை மையமாக வைத்து சமீபத்தில் மஞ்சும்மெல் பாய்ஸ் திரைப்படம் எடுக்கப்பட்டது.
இதையும் படிங்க: இதல்லவோ குடும்பம்… விஜயாக்கு பல்ப் மேல பல்பா கிடைக்குதே.. செம எண்டர்டெயின்மெண்ட் கியாரண்டி மக்கா!
அப்படி தமிழ் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் பாராட்டுக்களை பெற்று இருக்கும் மஞ்சும்மெல் பாய்ஸ் திரைப்படம் 100 கோடி வசூலை தாண்டி சென்று கொண்டு இருக்கிறது. பிரபலம் ஆகிவிட்டாலே பிரச்னை கூடவே கிளம்பிவிடும் என்பார்கள். அதற்கேற்ப படத்தின் இயக்குனர் சிதம்பரம் மீது அவர் முதல் நடிகை புகாரை சொல்லி இருக்கிறார்.
சோஷியல் மீடியாவில் பிரபலமாக இருக்கும் பிராப்தி எலிசபெத் சிதம்பரத்தின் படத்தின் போஸ்டுக்கு கீழ் அவர் எனக்கு கொடுத்த வலியை நான் எப்படி கூறுவேன். அவர் எனக்கு கொடுத்த பாலியல் சீண்டல்களின் வாட்ஸ் அப் மெசேஜ்களை வைத்திருக்கேன் என அரைகுறையாக சில குற்றச்சாட்டுகளை வைத்து இருக்கிறார்.
இதையும் படிங்க: விஜயகாந்த் படத்தில் நடிக்க மறுத்த அஜீத்!.. என்ன நடந்ததுன்னு தெரியுமா?..
சிதம்பரத்தின் முதல் படமான ஜான் இ மேனில் பிராப்தி நடித்திருப்பார் என்பதால் அங்கு எதாவது நடந்து இருக்குமா எனவும் ரசிகர்கள் கிசுகிசுக்கின்றனர். இன்னும் சிலர் இந்த சர்ச்சை கருத்தை 100 கோடி வசூலிக்கும் வரை அமைதியாக இருந்து சொல்ல என்ன காரணம் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மூன்று வருடங்களுக்கு முன்னர் நடந்த இந்த படத்தின் போது நடந்ததாக இருந்தாலும் அப்போதே கூறாமல் பிராப்தி எதுக்காக அமைதி காத்தார். இப்போது சொல்வதுக்கும் என்ன ஆதாரம் இருக்கிறது என்றும் ரசிகர்கள் தொடர்ச்சியாக அவரை குடைந்து வருகின்றனர்.
Pradeep Ranganathan: கோமாளி படம் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே படம் மூலம் ஹீரோவாகவும் வெற்றி பெற்றார்....
Hariskalyan: இந்த வருட தீபாவளிக்கு என்னென்ன திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன என்பதை பற்றிய தகவல் தான் இந்த செய்தியில் நாம் பார்க்க...
STR49: முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தாலும் மற்ற நடிகர்களை போல தொடர்ந்து நடிக்கும் நடிகராக சிம்பு இல்லை. திடீரென்று ஒரு ஹிட்...
Biggboss: விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ் நிகழ்ச்சி. கடந்த 8 சீசன்களாக இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் பெரும்...
Pradeep: கோமாளி திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி ரசிகர்களிடம் பிரபலமானவர் பிரதீப் ரங்கநாதன். ஜெயம் ரவி, யோகி பாபு ஆகியோர் முக்கிய...