Connect with us

Cinema News

நாய்க்கு கிடைத்த மரியாதை ரஜினிக்கு கிடைக்கலயே!.. சூப்பர்ஸ்டார் வாழ்வில் நடந்தது இதுதான்!..

Rajinikanth: பொதுவாக ரஜினிகாந்த் ஆரம்பத்தில் இருந்தே எப்போதும் பந்தாவாக இருக்க வேண்டும் என நினைக்காதவர். ரொம்பவே சிம்பிள்ளான உடையில் தான் வலம் வர ஆசைப்படுவார். அப்படி ஒருநாள் தயாரிப்பாளர் ஆபிஸ் வர அவரை நடிகர் என்றே ஒருவர் நம்பாமல் போன சுவாரஸ்ய சம்பவமும் நடந்து இருக்கிறது.

ரஜினிகாந்த் வில்லன் வேடத்தில் கமல் ஹீரோவாக நடித்த திரைப்படம் மூன்று முடிச்சு. இப்படத்தில் தான் நடிகை ஸ்ரீதேவி ஹீரோயினாக அறிமுகமானார். இப்படத்தில் தான் ரஜினிக்கு முக்கிய வேடம் முதல்முறையாக கிடைத்தது. இதை தொடர்ந்தே ரஜினிக்கு நிறைய வாய்ப்புகள் குவிந்தது.

இதையும் படிங்க: வடிவேலு செஞ்ச காரியத்துக்கு அரிவாளை தூக்கி வெட்டப் போன நடிகர்! இந்தளவுக்கு நடந்திருக்கா?

இப்படத்தினை கே.பாலசந்தர் எழுதி இயக்கி இருந்தார். கே.வெங்கடராமன் இப்படத்தினை தயாரித்து இருப்பார். பொதுவாக ரஜினிக்கு அந்த காலத்தில் நாயுடன் வாக்கிங் போவது வழக்கமாம். அப்படி ஒருமுறை வாக்கிங் செல்லும் போது வெங்கடராமன் அலுவலகம் இருக்க அங்கு யாரும் இருந்தால் பேசிக்கொண்டு இருக்கலாம் என்று உள்ளே செல்கிறார்.

நேராக சென்று சோபாவில் அமர்ந்தவர். அருகில் இருந்தவரிடம் ‘தீப்பெட்டி இருக்குமா?.. சிகரெட் பிடிக்கணும்’ என்கிறார். இரவு நேரத்தில் கருப்பாக லுங்கி, துண்டு சகிதமாக வந்த ரஜினியை நம்பாத அந்த நபர் ‘நீங்க யாரு? வெளியில் போங்க’ என்கிறார். நான் மூன்று முடிச்சு ஹீரோ. தயாரிப்பாளர் வெங்கடராமன் இல்லையா? எனக் கேட்டாராம். அந்த நபர், அவர்கள் எல்லாம் இல்லை. நான் அவர் உறவினர்.

இதையும் படிங்க: மஞ்சும்மெல் பாய்ஸ் இயக்குனர் மீது Metoo புகாரளித்த நடிகை.. பிரபலம் ஆகிட்டாலே பிரச்னை தானா?…

உன்னை எனக்கு தெரியாது. வெளியில் போ’ என்றாராம். அந்த நேரத்தில் ரஜினியின் நாய் உள்ளே நுழைந்ததாம். உயர்ரக நாயை பார்த்தவர். பெரிய ஆள் என நம்பி தீப்பெட்டியை எடுத்துக் கொடுத்து உபசரித்தாராம்.தனக்கு கிடைக்காத மரியாதை தனது நாய் மூலம் கிடைத்ததை எண்ணி சிரித்தாராம் ரஜினி.

Continue Reading

More in Cinema News

To Top