Cinema News
அருண் விஜய் படத்துக்கு கிடைத்த விமோச்சனம்!.. ரஜினிகாந்த் படத்துக்கு எப்போது கிடைக்கும்?..
லைகா தயாரிப்பில் உருவாகும் படங்கள் என்றாலே பெரும் கஷ்டத்தையும் நஷ்டத்தையும் சந்தித்து வருகின்றன. கடந்த ஆண்டு லைகா தயாரிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் மிகப்பெரிய சொதப்பலை சந்தித்தது. ஆனால், இந்த ஆண்டு லைகா தயாரிப்பில் அடுத்தடுத்து வெளியான 2 பெரிய படங்களும் படுதோல்வியை சந்தித்தன.
பொங்கலுக்கு சிவகார்த்திகேயன் நடித்த அயலான் திரைப்படமும், தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் படங்களும் அதிக தியேட்டர்களை ஆக்கிரமித்தும் சரியாக ஓடவில்லை. அருண் விஜய் நடிப்பில் வெளியான மிஷன் சாப்டர் 1 படத்துக்கு வெறும் 100 தியேட்டர்கள் மட்டுமே கிடைத்த நிலையில், படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்தன.
இதையும் படிங்க: 8 வயதிலேயே நடன இயக்குனராக பணிபுரிந்த ஜெயலலிதா! யாரும் அறிந்திராத ஜெ.வின் இன்னொரு பக்கம்
ஆனால், அருண் விஜய் படம் நல்லா இருக்கு என பேச்சுக்கள் அடிபட்டாலும் ரசிகர்கள் அந்த 100 தியேட்டருக்கு கூட சென்று படம் பார்க்காத நிலையில், அதிகமாக தியேட்டர்கள் அதிகரிக்காமல் படம் வசூல் ரீதியாக பெரும் பின்னடைவை சந்தித்தது.
ஏ.எல். விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன் மற்றும் நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த அந்த படத்தின் டிஜிட்டல் உரிமம் விற்பனை ஆகாமலே இருந்து வந்த நிலையில், தற்போது ஒரு வழியாக படத்தின் டிஜிட்டல் உரிமம் விற்பனையாகி விட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: டார்க் லிப்ஸ்டிக் சுண்டி இழுக்குதே!.. யாஷிகா ஆனந்தை பார்த்து மூச்சு முட்டும் ஃபேன்ஸ்.!..
சிம்ப்ளி சவுத் எனும் ஓடிடி தளத்தில் மிஷன் சாப்டர் 1 திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் இன்னும் எந்த ஓடிடியில் இந்த படம் வெளியாகப் போகிறது என்பதற்கான தகவல் ஏதும் வெளியாகவில்லை. இந்திய ரசிகர்கள் இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டியது தான்.
லைகா தயாரிப்பில் பிப்ரவரி மாதம் வெளியான லால் சலாம் திரைப்படம் இன்னமும் எந்தவொரு ஓடிடி நிறுவனமும் வாங்க முன் வராத நிலையில் இருப்பது ஓடிடி ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தி உள்ளது.