அஜித் அந்த விஷயத்தில் ரொம்பவே ஸ்ட்ரிக்ட்!.. ரகசியம் சொன்ன பிரபல காமெடி நடிகர்!..

Published on: March 10, 2024
Ajith, BavaLakshmanan
---Advertisement---

நடிகர் பாவா லட்சுமணன் காமெடி நடிகர். மாயி படத்தில் வாம்மா மின்னல் என்று அழைப்பாரே அவர் தான். அந்தக் காமெடியில் வைகைப்புயல் வடிவேலுவுக்கே டப் கொடுத்து நடித்திருப்பார். நிஜத்தில் ரொம்பவே ஓபன் டாக்காக பேசக்கூடியவர். இவர் அஜீத் குறித்து என்ன பேசியிருக்கிறார் என்று பார்க்கலாமா…

கமலும், ரஜினியும் நல்ல நண்பர்கள். ரஜினியுடன் கஷ்டப்படும்போது யார் யார் இருந்தாங்களோ அவங்க எல்லாருக்கும் வீடு, வாசல் வாங்கிக் கொடுத்து எல்லாரையும் சந்தோஷமா வச்சிருக்காரு. கடன் இல்லாம வாழணும். யாருக்கும் பயப்படக்கூடாது. ரோல் மாடல்லாம் யாரும் கிடையாது என்று சொல்லும் பாவா லட்சுமணன் 160 படம் வரை நடித்துள்ளாராம்.

Ajith
Ajith

அஜீத் சார் உதவி செய்யும்போதே வெளியே தெரிய வேணாம்னு சொல்லிடுவாராம். ஒரு ரசிகர் மன்றத்தையே கலைச்சிட்டு இன்று வரை மார்க்கெட்ல இருக்காருன்னா அது எவ்வளவு பெரிய விஷயம் என்கிறார் லட்சுமணன்.விஜய் சாருக்கு அப்பா, அம்மா இருக்காங்க. ஆனா அஜீத் சாருக்கு சினிமாவுல பேக்ரவுண்டே கிடையாது. ஒரு மெக்கானிக்கா இருந்து படிப்படியா வளர்ந்து வந்தவரு.

அவரு பெருமையை எல்லாம் ரொம்ப எதிர்பார்க்க மாட்டார். உதவி செய்யறது வெளியே தெரியக்கூடாதுன்னு நினைப்பார். அவரோட சேர்ந்து நீ வருவாய் என, திருப்பதி படங்கள்ல நடிச்சேன். நல்ல மனிதர். டைரக்டர் என்ன சொல்றாரோ அதைக் கேட்பாரு. சூட்டிங் ஸ்பாட்ல அவருக்கு அமைதியா இருக்கணும். நடிக்கும்போது யாராவது சவுண்டு கொடுத்தா சத்தம் போடுவார். அவ்வளவு கஷ்டப்பட்டு படம் எடுக்குறாங்க. கோஆப்ரேட் பண்ணுங்கன்னு சொல்வார் என்கிறார் பாவா லெட்சுமணன்.

இவர் சந்தானம், வடிவேலுவுடன் இணைந்து பல காமெடி படங்களில் நடித்துள்ளார். மிமிக்ரி ஆர்டிஸ்டாகவும் உள்ளார். இவருக்கு சமீபத்தில் சர்க்கரை நோய் தாக்கி காலில் கட்டை விரல் அகற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.