Connect with us
shaheela

Cinema News

அந்த மாதிரி நடிக்க எங்க அப்பாவும் ஒரு காரணம்!.. பகீர் பேட்டி கொடுத்த ஷகிலா!..

Actress Shakeela: மலையாள பட உலகில் முடி சூடா ராணியாக ஒரு காலத்தில் இருந்தவர் நடிகை ஷகீலா. கிளாமர் படங்களில் நடித்து ஒட்டுமொத்த இளைஞர்களையும் வசியப்படுத்தியவர். முதன் முதலில் ஒரு விழிப்புணர்வு படத்தில் நடிகை சிலுக்குக்கு தங்கையாக நடித்து அறிமுகமானார் ஷகீலா. அதன் பிறகு மலையாள சினிமா ஷகீலாவை சிவப்பு கம்பளம் விரித்து அழைத்தது.

வாரத்திற்கு ஒரு படம் வீதம் கேரளாவில் அனைத்து திரையரங்குகளிலும் ஷகீலாவின் திரைப்படங்களே வெளியானது. இதனால் மம்மூட்டி மற்றும் மோகன்லால் போன்ற பெரிய சூப்பர் ஸ்டார் படங்களின் தேதி தள்ளிவைக்கக் கூடிய சூழ்நிலை உருவானது. அந்தளவுக்கு ஷகீலா மலையாளத்தில் ஒரு கனவுக்கன்னியாக வாழ்ந்தார்.

இதையும் படிங்க: என்னா மேடம் மீண்டும் மீண்டுமா? வைரமுத்துவை கலாய்த்த சின்மயி… புகைப்படத்தால் ஷாக் கொடுத்த ரசிகர்கள்!..

இதனால் அவர் படங்கள் திரையிடக் கூடாது அல்லது ஷகீலாவின் படங்களை தள்ளி வைக்கும் படி மம்மூட்டி மற்றும் மோகன்லால் தரப்பில் இருந்து கூறப்பட்டது. இந்த நிலையில் ஷகீலா சமீபத்தில் அளித்த பேட்டியில் தான் ஏன் மலையாள சினிமாவை விட்டு வந்தேன் என்ற காரணத்தை கூறியிருக்கிறார். இவர் மலையாள சினிமாவில் இருந்து வெளியே வந்ததற்கு மம்மூட்டி மற்றும் மோகன்லால் காரணம் இல்லையாம்.

ஷகீலா நடித்த அனைத்து படங்களுக்கும் சென்சார் கொடுக்காமல் வைத்திருந்தார்களாம். அதுமட்டுமில்லாமல் ஒரு தயாரிப்பாளர் அவர் மனைவியின் தாலியை அடகுவைத்து ஷகீலாவை வைத்து படம் எடுக்க வந்தாராம். இதெல்லாம் பார்க்கும் போது இனி மலையாள சினிமாவே வேண்டாம் என அவர் ஒப்பந்தம் ஆன 23 படங்களுக்குமான அட்வான்ஸையும் திருப்பி கொடுத்து விட்டு வந்து விட்டாராம் ஷகீலா.

இதையும் படிங்க: மாப்பிள்ளை ரெடி.. பேக்கப்புக்கு ரெடி! திடீர் குண்டை தூக்கிப் போட்ட கிரண்.. இதுதான் மேட்டரா?

மேலும் ஒரு சில படங்களில் மேலாடை இல்லாமல் நடிக்க சொன்னாங்களாம். அது ஷகீலாவுக்கு தெரியாதாம். ஷூட் போன பிறகுதான் மேலாடையை கழட்டுங்கள் என்று சொன்னதும் ஷாக் ஆகிவிட்டாராம். உங்க அப்பாவிடம் இதைப் பற்றி சொல்லித்தான் அட்வான்ஸ் எல்லாம் கொடுத்தோம் என சொல்லியிருக்கிறார்கள். இதற்கு மேல் ஒன்றும் பண்ண முடியாது என நினைத்து அப்படி நடித்துக் கொடுத்தாராம். அதன் பிறகு அவர் அப்பாவை அழைத்த ஷகீலா இனி எல்லாம் நானே பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டாராம்.

Continue Reading

More in Cinema News

To Top