Cinema History
சம்பளமே வாங்காமல் சிவாஜி நடித்த திரைப்படம்!… நன்றி உணர்ச்சின்னா அது நடிகர் திலகம்தான்!..
சிறு வயது முதலே மிகவும் கஷ்டப்பட்டு மேலே வந்தவர்தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். சிறு வயதிலிருந்தே நாடகங்களில் நடித்து நடிப்பில் தன்னை மெருகேற்றிகொண்டவர். நாடகங்களில் பல கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார். அதோடு, தனக்கு நடிப்பு சொல்லி கொடுத்த குருவை கடவுளாக வணங்குவார்.
சிவாஜி பல நாடக கம்பெனிகளில் நடித்திருந்தாலும் பெருமாள் முதலியார்தான் அவரின் முக்கிய குரு. இவர்தான் பராசக்தி திரைப்படத்தை ஏவிஎம் நிறுவனத்தோடு இணைந்து தயாரித்தவர். அதோடு, அந்த படத்தில் சிவாஜி வேண்டாம் என ஏவி மெய்யப்ப செட்டியார் சொன்னபோது அதை ஏற்காதவர்.
இதையும் படிங்க: இரண்டு பெயரை கொடுத்த சிவாஜி ராவ்… மறுத்த கே.பாலசந்தர்.. ரஜினிகாந்த் உருவானதன் பின்னணி?
பராசக்தி படத்தில் சிவாஜிதான் கதாநாயகன் என சொல்லி சிவாஜியின் வாழ்க்கையில் ஒளி ஏற்றி வைத்தவர் அவர்தான். அதனால்தான் எப்போது பேட்டியில் அவரை பற்றி பேசினாலும் ‘எனது தெய்வம் பெருமாள் முதலியார்’ என்றுதான் சிவாஜி கணேசன் குறிப்பிடுவார். அந்த அளவுக்கு நன்றி உணர்வுடன் இருந்தவர்தான் சிவாஜி.
சிவாஜியின் நடிப்பில் 125வது படமாக வெளிவந்த திரைப்படம்தான் உயர்ந்த மனிதன். ஏவிஎம் நிறுவனம் தயாரித்த இந்த படத்தில் சிவாஜி, வாணிஸ்ரீ, சௌகர் ஜானகி, சிவக்குமார் என பலரும் நடித்திருந்தார்கள். கிருஷ்ணன் – பஞ்சு இப்படத்தை இயக்கியிருந்தார்கள். எம்.எஸ்.விஸ்வநாதன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
இதையும் படிங்க: பாதி படம் எடுத்தபின் குப்பையில் போடப்பட்ட சிவாஜி படம்!. ஆனா அங்கதான் ஒரு டிவிஸ்ட்!..
வழக்கமாக சிவாஜியின் அட்வான்ஸ் மற்றும் சம்பளத்தை அவரின் சகோதரர் சண்முகம்தான் தயாரிப்பாளர்களிடம் டீல் செய்வார். உயர்ந்த மனிதன் படத்தில் சிவாஜி நடிக்க முடிவானதும் அவருக்கு அட்வான்ஸ் தொகையை கொடுக்க ஏவிஎம் நிறுவனம் சண்முகத்தை அணுகியது.
ஆனால், ‘உங்களிடம் அட்வான்ஸ் எதுவும் வாங்க வேண்டாம் என அண்ணன் சொல்லிவிட்டார். படம் முடிந்த பின் சம்பளத்தை கொடுத்தால் போதும் எனவும் அவர் சொல்ல சொன்னார்’ என சண்முகம் சொல்லி இருக்கிறார். இதைக்கேட்டு ஏவிஎம் நிறுவனம் ஆச்சர்யப்பட்டு போனதாம்.
இதையும் படிங்க: வாலியை பார்த்தாலே சிவாஜி பாடும் அந்த பாடல்!… அந்த அளவுக்கு பிடிக்க காரணம் இதுதானாம்!..