முடி வளர்த்தது வேஸ்டா போச்சே! டிராப் ஆகுமா STR 48 படம்? மீண்டும் டாட்டா காட்டிய சிம்பு

Published on: March 11, 2024
simbu
---Advertisement---

STR 48: நீண்ட நாட்களாக புரொடக்ஷனில் இருக்கும் திரைப்படம் சிம்புவின் 48வது திரைப்படம். இந்த படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க தேசிங்கு பெரியசாமி இப்படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. படத்திற்காக சிம்பு வித்தியாசமான கெட்டப்பில் நடிப்பதாகவும் அதனால் அவருடைய முடியை நீளமாக வளர்த்து வந்ததாகவும் தெரிகிறது.

அது மட்டும் அல்லாமல் இந்த படம் ஒரு வரலாற்று பின்னணியில் உருவாகும் திரைப்படமாக தயாராகிறது என்றும் செய்திகள் வெளி வந்தன. மேலும் சிம்புவின் கெரியரிலேயே இந்தப் படம் தான் அதிக பட்ஜெட்டில் தயாராகும் படம் எனவும் கூறப்பட்டு வந்தது.

இதையும் படிங்க: ஒரு சீனுக்கு இவ்வளவு வசனமா?!.. ஆள விடுங்க!.. படப்பிடிப்பிலிருந்து மாயமான ரஜினி…

பிப்ரவரி இறுதியில் படம் ஆரம்பிக்கப்படுவதாக இருந்த நிலையில் திடீரென இந்தப் படம் டிராப் ஆகிவிட்டதாக செய்திகள் வெளியானது. அதன் பின்னனியை விசாரித்ததில் படத்தின் முன் தயாரிப்பு பணி என இழுத்துக் கொண்டே இருக்கிறார்களாம். மேலும் VFX  வேலைகளும் நடந்து கொண்டே இருக்கின்றதாம்.

மேலும் சிம்புவும் கொஞ்சம் டென்சனாகி விட்டதாக சொல்லப்படுகிறது. ஏனெனில் அதிக நாட்கள் இந்தப் படத்திற்காக சிம்பு காத்துக் கொண்டிருக்கிறார். இதைப் பற்றி பேசிய வலைப்பேச்சு அந்தணன் அவருடைய யூடியூப் சேனலில் இதுவரை துபாயில் இருந்த சிம்பு படத்தின் படப்பிடிப்பிற்காக சமீபத்தில் தான் சென்னை வந்தார் என்றும் ஆனால் படம் இன்னும் தாமதமாகும் என தெரிந்ததும் மீண்டும் துபாய்க்கே சென்று விட்டார் என்றும் அந்தணன் கூறினார். ஆக மொத்தம் படம் டேக் ஆப் ஆகுமா ஆகாதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க: அண்ணனுக்காக சூப்பர்ஸ்டார் படத்தையே ஸ்டாப் பண்ண அட்லீ!… டைட்டில் தாங்க மாஸ்…

அந்தணன் சொன்னதை போலவே STR 48 திரைப்படம் நீண்ட நாள்களாக புரடக்‌ஷனிலேயே இருந்து வருகிறது. இதுவரை அந்தப் படத்தை பற்றி எந்தவொரு அப்டேட்டும் வரவில்லை, டைட்டில் கூட வெளியிடவில்லை. அதனால்தான் இந்தப் படம் டிராப் ஆகும் நிலைமைக்கு கூட போகலாம் என்று சொல்லப்படுகிறது.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.